குழு விற்பனை
இந்த தனித்துவமான வசதி பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கிடைக்கிறது. இந்த அமைப்புகளின் ஊழியர்கள் எந்தவொரு நுகர்வோர் உற்பத்திகளையும் தேர்ந்தெடுத்து மாத தவணைகளில் செலுத்தலாம். இந்த தவணைகள் அந்தந்த ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் எமக்கு அனுப்பப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் முழு தொகையையும் செலுத்த வேண்டிய கட்டாயமின்றியே முதல் நாளிலிருந்தே உற்பத்தியின் நன்மைகளை அனுபவிக்கின்றனர்.

இந்த வசதியை மேற்பார்வையிட தலைமை அலுவலகத்தில் திறமையான ஊழியர்களுடன் ஒரு பிரத்தியேக பிரிவை அமைத்துள்ளோம். இந்த பிரிவுக்கு ஒரு தகவல் தொழில்நுட்ப முறைமை துணைபுரிகிறது. இந்தத் துறையில் சந்தைத் தலைவராக சிங்கர் ஃபைனான்ஸ் இருப்பதால் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சேவையாற்றி வருகிறது.