வாடிக்கையாளர் பாதுகாப்பு
உங்கள் உரிமைகள் முக்கியம் - ஒரு மதிப்புமிக்க நுகர்வோராக உங்களைப் பாதுகாப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டைக் கண்டறியவும்.
Stakeholder Communication Policy document
Recoveries/Collections play a major role in finance business in order to secure the company asset. At Singer Finance Senior Manager or equal position heading the recovery division. He is assisted by Recovery Managers/executives; Recovery officers/assistants manage the collections infield level. In addition, at Branch level Branch Managers and branch staff is also involved in collection functions.
Further to strengthen the recoveries, Legal panel handles the difficult cases by way of Arbitration/ filling actions through Magistrate & District courts.
Generally Following steps will be taken as a procedure of the Company in Recoveries.
Financial Customer Protection Framework Document
The present holder of this office is Mr. Ananda Kumaradasa
The Financial Ombudsman has the power to inquire into and settle any complaints and disputes between individual customers and the financial institutions covered by the Ombudsman Scheme.
The financial institutions that are voluntarily participating in this scheme are only those regulated and supervised by the Central Bank of Sri Lanka.
The objective of the Ombudsman scheme is the satisfactory settlement and resolution of complaints/disputes by customers of banks and other financial institutions covered by the Scheme, with power to make monetary awards binding on the participating financial institutions....
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப்பிரஜை மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை (தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு) வைத்திருக்கும் எவரும் சேமிப்புக் கணக்கை ஆரப்பிக்க முடியும்.
குறைந்த வைப்புத்தொகை ரூபா 3,00
வைப்புகள் ரொக்கம், நேரடி பரிமாற்றங்கள் அல்லது சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி என வரையப்பட்டு குறுக்குக்கோடிடப்பட்ட (கணக்கு கட்டனம் மட்டும்) காசோலை ஆகிய வைப்பு முறைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
கடவுப்புத்தகம் அல்லது கணக்குக்கூற்றை வாடிக்கையாளர் கோறலாம். தொலைந்து போன கடவுப்புத்தகம் என்றால் திருப்திகரமான விளக்கத்தைப் பெற்றவுடன் புதிற கடவுப்புத்தகம் வழங்கப்படும்.
வட்டி தினந்தோறும் திரட்டப்பட்டு மாதந்தோறும் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அனைத்து சேமிப்புக் கணக்குதாரர்களுக்கும் வரவு அட்டை (Debit Card) வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களின் VISA தானியக்க இயந்திரங்க்ள மற்றும் POS இயந்திரங்களில் பயன்படுத்தலாம்.
அனைத்து வைப்புதாரர்களுக்கும் Online வங்கிச்சேவை வழங்கப்படும்.
365 நாட்கள் பரிவர்த்தனைகள் இல்லத சேமிப்புக் கணக்குகள் செயலற்றதாக மாற்றப்பட்டு பற்றுகள் மற்றும் வரவுகள் முடக்கப்படும். வாடிக்கையாளரின் வேண்டுகோளின் பெயரில் மீண்டும் செயல்படுத்தப்படும். செயலற்ற நிலை 10 ஆண்டுகள் தொடர்ந்தால் அத்தகைய கணக்குகள் 2011 ஆம் ஆண்டின் நிதி வணிகச் சட்ட எண் 42 இன் கீழ் மத்திய வங்கிக்கு தெரிவிக்கப்படும்.
தகுதியான வைப்புகள் ஒரு வைப்பாளருக்கு அதிகபட்ச தொகை ரூபா 1,100,000 வரை இழப்பீட்டுக் காப்புறுதிக்காக நாணய சபையால் செயல்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தில் காப்பீடு செய்யப்படுகின்றன்
கணக்கு மூடப்படும் பட்சத்தில் சேவைக்கட்டணமாக ரூபா 300 நிறுவனத்தால் கழிக்கப்படும்
வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான பரிவர்த்தனைகளை திரும்பப்பெறுமாறு கோறினால் வாடிக்கையாளர் கோறிக்கை மற்றும் தொடர்புடைய ஆதார ஆவணங்களை நாங்கள் சேகரிக்க வேண்டும். மேலும் அந்த கோரிக்கை உயர் அதிகாரியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
சேமிப்புக் கணக்கைத் திறக்க பின்வரும் ஆவணங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
➢ தனிப்பட்ட அல்லது கூட்டு வைப்புகள்
நிலையான வைப்புப்படிவம்
வாடிக்கையாளர் விபரப்படிவம் (KYC)
வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச்சட்ட படிவம் (FACTA)
தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ ஓட்டுநர் உரிம பிரதி.
முகவரி உருதிப்படுத்தல் ஆவணப்பிரதி.
பின் உறித்து அடையாள ஆவணங்கள்
கார்ப்ரேட் அல்லது பிற நிறுவனங்கள்
நிலையான வைப்புப்படிவம்
வாடிக்கையாளர் விபரப்படிவம் (KYC) மற்றும் தேவையான ஆவணங்கள்
வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச்சட்ட படிவம் (குயுவுஊயு)
வியாபாரப் பதிவு/ ஒருங்கிணைப்புச் சான்றிதழ்
சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்பு உள்ளடங்கள் ஆவணம் (AOA)
தீர்மான குழு
நன்மைபயக்கும் உரிமையாளரின் அறிவிப்பு
நிர்வாகக்குழு அங்கத்தவர்களின் வாடிக்கையாளர் விபரப்படிவம் (KYC) மற்றும் அடையாள ஆவணங்கள்
அங்கிகரிக்கப்பட்டவர்களின் கையொப்பதாரர்களின் கடிதம்.
அங்கிகரிக்கப்பட்டவர்களின் கையொப்பதாரர்களின் அடையாள ஆவணங்கள்
படிவம் 20
படிவம் 13 (தேவைப்பட்டால்)
முகவரி உருதிப்படுத்தல் ஆவணங்கள் (பட்டியல் கொடுப்பனவு மசோதா அல்லது நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கிக்கணக்குக் கூற்று).
கவர்ச்சிகரமான வட்டி வகிதம் நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் வாடிக்கையாளருக்கு அறிவிக்காமல் வட்டி வகிதத்தை மாற்றும் உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.
புகார்கள் அல்லது பரிந்துரைகளை இங்கே தெரிவிக்கலாம்
புகார்கள் கையாளுதல் கொள்கைகளை தேவைப்பட்டால் இங்கே பதிவிரக்கம் செய்யலாம்.
முத்து சிறுவர் சேமிப்புக் கணக்கு
முத்து சிறுவர் சேமிப்புக் கணக்கை பெற்றோர் அல்லது பாதுகாவலர் சிறுவர்களின் பெயரில் (18 வயதிற்குட்பட்ட) திறக்கலாம்
விண்ணப்பப்படிவத்துடன் சிறுவரின் பிறப்புச்சான்றிதழ் உடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை மற்றும் முகவரி உருதிப்படுத்தல் ஆவணம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
குறைந்த வைப்புத்தொகை ரூபா 300/-
வைப்புகள் ரொக்கம்இநேரடி பரிமாற்றங்கள் அல்லது சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி என வரையப்பட்டு குறுக்குக்கோடிடப்பட்ட (கணக்கு கட்டனம் மட்டும்) காசோலை ஆகிய வைப்பு முறைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
சிறுவருக்கு 18 வருடங்கள் நிறைவடையும் போது கணக்கு தானாகவே சாதரண கணக்கிற்கு மாற்றப்படும். எவ்வாறாயினும் சிறுவரை ஒரு கிளைக்கு அழைத்து கணக்கு வைத்திருப்பவர் என்பதை உறுதிப்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிற்கும் வரை சிறுவர் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. மேலதிகமாக கணக்கு வைத்திருப்பவருக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் புதிய சாதரண கணக்கில் இருப்பை தொடர வாய்ப்புண்டு. சுhதாரண சேமிப்புக் கணக்குகளின் கீழ் வகைப்படுத்ப்படும் அனைத்து கணக்குகளுக்கும் நிறுவனத்தின் பொதுவான செயலற்ற கொள்கை பொருந்தும்.
சிறுவர் 18 வருடங்களை பூர்த்தி அடையும் முன்னர் கணக்கில் மீளப்பெறுதலை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.
முத்து சேமிப்புக்கணக்குப் புத்தகம் வழங்கப்படும்.
வட்டி தினமும் திரட்டப்பட்டு மாதந்தோறும் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து அறுபது மாதங்கள் (5 வருடங்கள்) முடிந்ததும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விருப்பப்படி சிறுவரால் பராமறிக்கப்படும் ஒரு சேமிப்புக் கணக்கிற்கு மீதியை மாற்றலாம்.
தகுதியான வைப்புகள் ஒரு வைப்பாளருக்கு அதிகபட்ச தொகை ரூபா 1,100,000 வரை இழப்பீட்டுக் காப்புறுதிக்காக நாணய சபையால் செயல்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தில் காப்பீடு செய்யப்படுகின்றன்
18 வயதில் கணக்கை மூடி விட்டால் அல்லது வேறு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் பராமரிக்கப்படும் கணக்கிற்கு மாற்றப்பட்டால் நிறுவனத்தால் ரூ 300. சேவைக்கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
எங்களிடம் உள்ள சாதரண கணக்கிற்கு கணக்கு மாற்றப்பட்டால் எந்த சேவைக்கட்டணமும் விதிக்கப்படாது.
சிறுவர் சேமிப்புக் கணக்கைத் திறக்க பின்வரும் ஆவணங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
முத்து சேமிப்புக் கணக்கு
முத்து சேமிப்புக் கணக்கு விண்ணப்பம்
புpறப்புச்சான்றிதிழ் பிரதி - சிறுவர்
வாடிக்கையாளர் விபரப்படிவம் (KYC) - பெற்றோர் அல்லது பாதுகாவலர்
வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச்சட்ட படிவம் (FACTA) - பெற்றோர் அல்லது பாதுகாவலர்.
தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ ஓட்டுநர் உரிம பிரதி. - பெற்றோர் அல்லது பாதுகாவலர்.
முகவரி உருதிப்படுத்தல் ஆவணப்பிரதி.
கவர்ச்சிகரமான வட்டி வகிதம் நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் வாடிக்கையாளருக்கு அறிவிக்காமல் வட்டி வகிதத்தை மாற்றும் உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.
புகார்கள் அல்லது பரிந்துரைகளை இங்கே தெரிவிக்கலாம்
புகார்கள் கையாளுதல் கொள்கைகளை தேவைப்பட்டால் இங்கே பதிவிரக்கம் செய்யலாம்.
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப்பிரஜை மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை (தேசிய அடையாள அட்டைஇஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு) வைத்திருக்கும் எவரும் நிலையான வைப்பை வைப்பு செய்ய முடியும்.
குறைந்த வைப்புத்தொகை ரூபா 5,000
நிலையான வைப்பு தனியாகவோ அல்லது மூன்று வைப்புதாரர்கள் வரை இணைந்தோ வைப்பு செய்ய முடியும்.
தனிஇகாப்ரேட் (கம்பனிகள்), சங்கங்கள், அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் வைப்புகள் ஏற்றுகடகொள்ளப்படும்.
வைப்புகள் ரொக்கம், நேரடி பரிமாற்றங்கள் அல்லது சிங்கர் பினான்ஸ் (லங்கா) பிஎல்சி என வரையப்பட்டு குறுக்குக்கோடிடப்பட்ட (கணக்கு கட்டனம் மட்டும்) காசோலை ஆகிய வைப்பு முறைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பத்தில் பரிந்துரைக்கப்பட்ட பணம் பெறுபவருக்கு மாதாந்தம் மற்றும் முதிர்ச்சியின் போது வட்டி வழங்கப்படலாம்
வைப்புகள் முதிர்ச்சியடைவதற்கு 7-14 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் அறிவிப்பு பெறப்படும். வைப்பில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முதிர்ச்சி திகதியில் அல்லது அதற்கு முன் அறிவுறுதல்கள் மற்றும் கையொப்பத்துடன் புதுப்பித்தல் கடிதத்தை அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால் முந்தைய வழிமுறையின் வைப்புத்தொகை புதுப்பிக்கப்படும்.
எந்தவொரு வைப்பு மீளப்பெறுதலின் போதும் வைப்புச்சான்றிதழ் கையளிக்கப்பட வேண்டும்.
நிலையான வைப்பில் குறிப்பிட்ட காலங்களுக்கு முன்கூடியே திருப்பப்பெறமுடியாது. இருப்பினும் வைப்புகள் அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதி முதிர்வுக்கு முன் திருப்பப்பெறப்பட்டால் வைப்புத்தொகையின் காலத்தை பொறுத்து வட்டி குறைக்கப்படும். வைப்பாளருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட அதிகபடியான வட்டி நிறுவனத்தால் திருப்பப்பெறப்படும். எனவே வைப்பிலடப்பட்ட மூலதனத்திலிருந்து மேற்படி கூடுதல் தொகையைக் கழிக்க நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
எந்த நேரத்திலும் முன்கூடியே திருப்பப்பெறுதலுக்கான விதிக்கப்படும் அபராதம் அல்லது சலுகை விகிதத்தை மாற்றுவதற்கு நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
0 - 29 நாட்கள் - வட்டி இல்லை
30 - 179 நாட்கள் - 2.5%
180 நாட்களுக்கு மேல் - 3.5%
*ஒரு மாதத்திற்கு வைக்கப்படும் வைப்புத்தொகைகள் முன்கூடியே மீளப்பெறப்பட்டால் வட்டி செலுத்தப்படமாட்டாது.*
பணமாகவோ கணக்கு செலுத்துபவரின் காசோலையாகவோ அல்லது கூடுதல் கட்டணம் ஏதுமின்றி நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதிர்வு காலத்தில் எந்த அறிவித்தலும் வரவில்லை என்றால் நிலையான வைப்பானது தானகவே அதே காலத்திற்கு நடைமுறையில் உள்ள வட்டி வீதத்தில் புதுப்பிக்கப்படும்.
நிலையான வைப்புதாரர்கள் தங்களது நிலையான வைப்பு முதலின் 75% வரை (நிலையான வைப்பின் வட்டி மாதாந்தம் செலுத்தப்பட்டால்) அல்லது நிலையான வைப்பு முதலின் 80% வரை (நிலையான வைப்பின் வட்டி முதிர்வின் போது செலுத்தப்பட்டால்) பெற்றுக் கொள்ள முடியும். ஆத்தகைய மீளப்பெறல்கள் நிலையான வைப்பிற்குப் பொறுந்தக்கூடிய வட்டி வீதத்தை விட 5% அனைத்தையும் உள்ளடக்கிய சேவைக்கட்டணத்திற்கு உட்பட்டது. இந்த நிதி வசதி நிறுவனத்தின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் மேலும் எந்த நேரத்திலும் தற்காலிக மீளப்பெறலை மேற்கொள்ளும் போது விதிக்கப்படும் சேவைக்கட்டணத்தை மாற்றுவதற்கான உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.
இந்த வசதிக்கான காப்புரிமையின் கீழ் வைப்புச் சான்றிதழ் எங்களிடம் இருக்கும். சேவைகளுக்கான தகவல் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. எனவே சமீபத்தய தகவல் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு வைப்புத்துறை அல்லது அருகில் உள்ள கிளையைத் தொடர்புகொள்ளவும்.
தகுதியான வைப்புகள் ஒரு வைப்பாளருக்கு அதிகபட்ச தொகை ரூபா 1,100,000 வரை இழப்பீட்டுக் காப்புறுதிக்காக நாணய சபையால் செயல்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தில் காப்பீடு செய்யப்படுகின்றன்.
2011ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் படி அதிகபட்சமாக 10 வருடங்கள் பரிவர்த்தனை அல்லது கடிதப்பரிமாற்றங்கள் இல்லாத வைப்புகள் செயலற்றதாக இனங்கானப்பட்டு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படும்.
நிலையான வைப்பைத்திறக்க பின்வரும் ஆவணங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
தனிப்பட்ட வைப்புகள்
நிலையான வைப்புப்படிவம்
வாடிக்கையாளர் விபரப்படிவம் (KYC)
வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச்சட்ட படிவம் (FACTA)
தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டுஃ ஓட்டுநர் உரிம பிரதி.
முகவரி உருதிப்படுத்தல் ஆவணப்பிரதி.
பின் உறித்து அடையாள ஆவணங்கள்
கார்ப்ரேட் அல்லது பிற நிறுவனங்கள்
நிலையான வைப்புப்படிவம்
வாடிக்கையாளர் விபரப்படிவம் (KYC) மற்றும் தேவையாள ஆவணங்கள்
வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச்சட்ட படிவம் (FATCA)
வியாபாரப் பதிவு/ ஒருங்கிணைப்புச் சான்றிதழ்
சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்பு உள்ளடங்கள் ஆவணம் (KYC)
தீர்மான குழு
நன்மைபயக்கும் உரிமையாளரின் அறிவிப்பு
நிர்வாகக்குழு அங்கத்தவர்களின் வாடிக்கையாளர் விபரப்படிவம் (KYC) மற்றும் அடையாள ஆவணங்கள்
அங்கிகரிக்கப்பட்டவர்களின் கையொப்பதாரர்களின் கடிதம்.
அங்கிகரிக்கப்பட்டவர்களின் கையொப்பதாரர்களின் அடையாள ஆவணங்கள்
படிவம் 20
படிவம் 13 (தேவைப்பட்டால்)
முகவரி உருதிப்படுத்தல் ஆவணங்கள் (பட்டியல் கொடுப்பனவு மசோதா அல்லது நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கிக்கணக்குக் கூற்று).
புகார்கள் அல்லது பரிந்துரைகளை இங்கே தெரிவிக்கலாம்
புகார்கள் கையாளுதல் கொள்கைகளை தேவைப்பட்டால் இங்கே பதிவிரக்கம் செய்யலாம்.
சிங்களம்
தமிழ்
சிங்களம்
தமிழ்
வாகனங்கள், இயந்திரங்கள் அல்லது தனிப்பட்ட அல்லது வணிகப் பயன்பாட்டிற்கான சொத்து வாங்குதல் உள்ளிட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கள் கடன் அளவு கொள்கைகளை பூர்த்தி செய்யும் வருங்கால தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாங்கள் நிதி வசதிகளை வழங்குகிறோம்.
சிங்கர் ஃபைனான்ஸ் சொத்து (வாகனம்/ இயந்திரங்கள்/சொத்து) மற்றும் வாடிக்கையாளரின் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் பிற நற்சான்றிதழ்களின் அடிப்படையில் போட்டித் தன்மை, வெளிப்படையான விலை மற்றும் வசதிகளுக்கான கட்டணங்களை வழங்குகிறது.
நிதியளிக்கப்பட்ட தொகை, வாடகை, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம், மேலதிக பாதுகாப்பு தேவைகள், பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தரம், அடையாளம், உற்பத்தி நாடு, மதிப்பிடப்பட்ட பொருளாதார வாழ்க்கை, உற்பத்தி ஆண்டு மற்றும் வாகனம் அல்லது இயந்திரம் தொடர்பான அனைத்து மாறிகளையும் பொறுத்து மாறுபடும்.
ஒரு நிதி வசதியை வழங்குவதற்கு முன், சிங்கர் ஃபைனான்ஸ் திருப்பிச் செலுத்தும் திறன், கடந்த கால கட்டண நடத்தை, நிகர மதிப்பு மற்றும் வாடிக்கையாளரைப் பற்றிய பிற தொடர்புடைய உண்மைகளைச் சுயாதீனமாக மதிப்பீடு செய்து சரிபார்க்கும்.
சிங்கர் ஃபைனான்ஸுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் உங்கள் வசதிக்கு பொருந்தக்கூடிய மாதாந்திர வாடகைகள் மற்றும் பிற கட்டணங்களை நாங்கள் விளக்குவோம்.
எங்கள் அதிகாரிகளிடம் எங்களது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பெறவும், ஆராய்ந்து தெளிவுப்படுத்தவும் உங்களை அழைக்கிறோம்.
ஒப்பந்தத்தில் நுழையும்போது, வட்டி வீதம், விலைகள் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து சிங்கர் ஃபைனான்ஸ் பிரதிநிதிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் பெறுவதை உறுதி செய்து கொள்ளவும்.
குத்தகை
நிதியளிக்கப்பட்ட தொகை, வாடகை, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம், மேலதிக பாதுகாப்பு தேவைகள், பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தரம், அடையாளம், உற்பத்தி நாடு, மதிப்பிடப்பட்ட பொருளாதார வாழ்க்கை, உற்பத்தி ஆண்டு மற்றும் வாகனம் அல்லது இயந்திரம் தொடர்பான அனைத்து மாறிகளையும் பொறுத்து மாறுபடும்.
மோட்டார் வாகனப் பதிவாளரால் (RMV) ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து வாகன வகைகளுக்கும் நாங்கள் இடமளிக்கிறோம்.
உ.ம்: மோட்டார் கார்கள், வேன்கள், இரட்டை நோக்கம் கொண்ட வாகனங்கள், மோட்டார் லொரிகள், மோட்டார் கோச் (பஸ்கள்), முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை.
எங்களால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சமமான வாடகை அல்லது கட்டமைக்கப்பட்ட கொடுப்பனவுகள் மூலம் நீங்கள் திருப்பிச் செலுத்தலாம்.
(நிதிக் குத்தகை தயாரிப்பு தொடர்பான நடைமுறையில் உள்ள சட்டம் 2007 இன் குத்தகை சட்டம் எண் 33 (திருத்தம்) மற்றும் ஒப்பந்தச் சட்டம்.
வட்டி மற்றும் அபராதங்கள்
வட்டி
குறைந்தது: 16.25%
கூடியது: 37.00%
அபராத கட்டணம்: மேலதிக வட்டி வீதம்: 4.50%
பிற கட்டணங்கள்
சேவைக் கட்டணம்: குத்தகை தொகை / வாகனத்தின் வகைக்கு ஏற்ப (விளக்கப்படத்தைப் பார்க்க)
காப்பீட்டுக் கட்டணம்: காப்பீட்டு மேற்கோளுக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை ரொக்கமாக/ கடனாக செலுத்த முடியும்
முத்திரைக் கட்டணம்: பொருந்தினால்: நிகர மீளப்பெறக்கூடிய தொகையில் 1%
RMV கட்டணம்: RMV வழிகாட்டலுக்கமைய
வாகனக் கடன்
மோட்டார் வாகனப் பதிவாளரால் (RMV) ஏற்றுக்கொண்டு அனைத்து வாகன வகைகளுக்கும் நாங்கள் இடமளிக்கிறோம்.
உ.ம்: மோட்டார் கார்கள், வேன்கள், இரட்டை நோக்கம் கொண்ட வாகனங்கள், மோட்டார் லொரிகள், மோட்டார் கோச் (பஸ்கள்), முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை.
எங்களால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சமமான வாடகை அல்லது கட்டமைக்கப்பட்ட கொடுப்பனவுகள் மூலம் நீங்கள் திருப்பிச் செலுத்தலாம்.
(வாகனக் கடன்கள் தொடர்பான சட்டம் (திருத்தம்) எண் 3இன் 1990 மற்றும் ஒப்பந்தச்சட்டம்)
வட்டி மற்றும் அபராதங்கள்
வட்டி
குறைந்தது: 18.50%
கூடியது: 20.00%
அபராத கட்டணம்: மேலதிக வட்டி வீதம்: 4.50%
பிற கட்டணங்கள்
சேவைக் கட்டணம்: குத்தகை தொகை /வாகனத்தின் வகைக்கு ஏற்ப (விளக்கப்படத்தைப் பார்க்க)
காப்பீட்டுக் கட்டணம்: காப்பீட்டு மேற்கோளுக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை ரொக்கமாக/ கடனாக செலுத்த முடியும்
முத்திரைக் கட்டணம்: பொருந்தினால் நிகர மீளப்பெறக்கூடிய தொகையில் 0.1% (கோரிக்கைக்கு முன்மொழிவிற்கேற்ப)
RMV கட்டணம்: RMV வழிகாட்டலுக்கமைய
வாகன அடைமானக்கட்டணம்: குத்தகைத் தொகையில் 0.1% (அடைமானப் பத்திரத்திற்கான முத்திரை வரி )
அடைமானப்பத்திரப் பதிவுக்கு ரூ.250/-
வாகன அடைமானப் பத்திர செயலாக்க கட்டணமாக ரூ.5,000/-
(Revolving loan) சுழல் கடன்
சுழலும் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நெகிழ்வானவை. ஒப்பந்தத்தில் நுழையும் போது எங்களால் நிர்ணயக்கப்பட்ட மாதாந்திர குறைந்தபட்ச வட்டிக்கு உட்பட்டு நீங்கள் விரும்பியபடி திருப்பிச் செலுத்தலாம்.
ஒப்பந்த காலத்தின் போது நீங்கள் கடன் வசதியை ஓரளவு அல்லது முழுவதுமாக தீர்த்துக்கொள்ளலாம்.
(சுழல் கடன்கள் தொடர்பான அடமானச்சட்டம் (திருத்தம்) எண் 3இன் 1990 மற்றும் ஒப்பந்தச்சட்டம்)
வட்டி
குறைந்தது: 16.50%
கூடியது: 22.00%
அபராதங்கள்
அபராத கட்டணம்: மேலதிக வட்டி வீதம்: 4.50%
பிற கட்டணங்கள்
சேவைக் கட்டணம்: குத்தகை தொகை /வாகனத்தின் வகைக்கு ஏற்ப (விளக்கப்படத்தைப் பார்க்க)
காப்பீட்டுக் கட்டணம்: காப்பீட்டு மேற்கோளுக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை ரொக்கமாக/ கடனாக செலுத்த முடியும்
முத்திரைக் கட்டணம்: பொருந்தினால்:நிகர மீளப்பெறக்கூடிய தொகையில் 0.1% (கோரிக்கைக்கு முன்மொழிவிற்கேற்ப)
RMV கட்டணம்: RMV வழிகாட்டலுக்கமைய
வாகன அடைமானக்கட்டணம்: குத்தகைத் தொகையில் 0.1% (அடைமானப் பத்திரத்திற்கான முத்திரை வரி)
அடைமானப்பத்திரப் பதிவுக்கு ரூ.250/-
வாகன அடைமானப் பத்திர செயலாக்க கட்டணமாக ரூ.5,000/-
நில அடமானக் கடன் (சொத்துக் கடன்)
நில அடமானக் கடன்களுக்கு தொழில் முறை மதிப்பீட்டாளரால் மதிப்பிடப்படும் அசையா சொத்தின் மீதான முதன்மை அடைமானம் தேவை.
அதிகபட்ச கடன் தொகை சொத்தின் சந்தை பெறுமதியில் 70% மற்றும் அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 60 மாதங்கள் (5 வருடங்கள்)
சொத்து கடன்கள் தொடர்பான சட்டங்கள் அடமானச் சட்டம் (திருத்தம்) எண் 3இன் 1990 மற்றும் ஒப்பந்தச் சட்டம்
வட்டி
குறைந்தது: 18.00%
கூடியது: 25.00%
அபராத கட்டணம்: மேலதிக வட்டி வீதம்: 4.50%
சேவைக் கட்டணம்: குத்தகைத் தொகைக்கு ஏற்ப (விளக்கப்படத்தைப் பார்க்கவும்)
காப்பீடு (DTA - குறைந்து வரும் ஆயுள் காப்பீடு): பொருந்தினால் -காப்பீட்டு மேற்கோளுக்கேற்ப காப்பீட்டுத் தொகை
காப்பீடு (தலைப்புக் காப்பீடு): பொருந்தினால் - காப்பீட்டு மேற்கோளுக்கேற்ப காப்பீட்டுத் தொகை
முத்திரை வரி: குத்தகைத் தொகையில் 0.1% (பெறப்பட்ட கோரிக்கை உறுதி மொழிக்கு)
சட்டக் கட்டணம்: குத்தகைத் தொகைக்கு ஏற்ப
மதிப்பீட்டுக் கட்டணம்: சொத்தின் பெறுமதிக்கு ஏற்ப
தனிப்பட்ட கடன்
உங்கள் வாழ்க்கை மிகப்பெரிய விஷயங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைச் செய்ய நாங்கள் உதவுகின்றோம். எங்களின் சஹானா தனிநபர் கடன்களுடன் உங்கள் அடுத்த சாகசத்தை தொடங்குங்கள்.
குறிப்பாக உங்களின் தனிப்பட்ட தேவைகள் அனைத்தும் சிங்கர் ஃபைனான்ஸில் உங்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் எங்களுக்கு ஒவ்வொரு கடனும் தனிப்பட்டது.
வட்டி
குறைந்தது: 15.50%
கூடியது: 30.00%
அபராதங்கள்
அபராத கட்டணம்: மேலதிக வட்டி வீதம்: 4.50%
பிற கட்டணங்கள்
சேவைக் கட்டணம்: குத்தகை தொகை /வாகனத்தின் வகைக்கு ஏற்ப (விளக்கப்படத்தைப் பார்க்க)
காப்பீட்டுக் கட்டணம்: காப்பீட்டு மேற்கோளுக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை ரொக்கமாக/ கடனாக செலுத்த முடியும்
முத்திரைக் கட்டணம்: பொருந்தினால்:நிகர மீளப்பெறக்கூடிய தொகையில் 0.1% (கோரிக்கைக்கு முன்மொழிவிற்கேற்ப)
RMV கட்டணம்: RMV வழிகாட்டலுக்கமைய
தற்காலிக மீளப்பெறல் (நிலையான வைப்புக்கு எதிரான கடன்)
நிலையான வைப்புதாரர்கள் தங்களது நிலையான வைப்பு முதலின் 75% வரை (நிலையான வைப்பின் வட்டி மாதாந்தம் செலுத்தப்பட்டால்) அல்லது நிலையான வைப்பு முதலின் 80% வரை (நிலையான வைப்பின் வட்டி முதிர்வின் போது செலுத்தப்பட்டால்) பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தகைய மீளப்பெறல்கள் நிலையான வைப்பிற்குப் பொருந்தக்கூடிய வட்டி வீதத்தை விட 5% அனைத்தையும் உள்ளடக்கிய சேவைக்கட்டணத்திற்கு உட்பட்டது.
இந்த நிதி வசதி நிறுவனத்தின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும். மேலும் எந்த நேரத்திலும் தற்காலிக மீளப்பெறலை மேற்கொள்ளும் போது விதிக்கப்படும் சேவைக்கட்டணத்தை மாற்றுவதற்கான உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.
நுகர்வோர் நிதி
இந்த தனித்துவமான வசதி பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள புகழ் பெற்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கிடைக்கிறது.
இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் எந்தவொரு நுகர்வோர் பொருளை தேர்ந்தெடுத்து அதனை மாதாந்திரத் தவணைகளில் செலுத்தலாம். இந்தத் தவணைகள் அந்தந்த ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் எங்களுக்கு அனுப்பப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் முழுத்தொகையையும் முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லாமல் முதல் நாளில் இருந்தே தயாரிப்பின் பலன்களை அனுபவிக்கிறார்கள்.
இந்தச் செயல்பாட்டினை மேற்பார்வை செய்வதற்காக தலைமை அலுவலகத்தில் திறமையான ஊழியர்களைக் கொண்ட ஒரு பிரத்தியேக பிரிவு நிறுவப்பட்டுள்ளது. அதிநவீன தகவல் தொழில்நுட்ப அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
சிங்கர் ஃபைனான்ஸ் இப்பிரிவில் சந்தையில் நாடளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் 400-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சேவை செய்து வருகிறது.
வட்டி
குறைந்தது: 35.00%
கூடியது: 45.00%
அபராதக்கட்டணம்
அபராதக்கட்டணம் இல்லை
ஏனைய கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்
ஏனைய கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் இல்லை
நுன்நிதி
நுன்நிதி என்பது வங்கி மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கான அணுகல் இல்லாத தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கான நிதிச் சேவைகளின் ஆதரவாகும்.
இது ஒரு குழு அடிப்படையிலான மாதிரியாகும். இதில் பல தொழில் முனைவோர் ஒன்றிணைந்து குழுவாக கடன் வசதிக்கு விண்ணப்பிக்கின்றனர். நுன்நிதியானது தொழில் முனைவோருக்கு அவர்களின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் சாதனங்கள், சரக்குப் பொருட்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு நிதியளிக்க சிறிய கடன்களை வழங்குகின்றது.
(நுன்நிதி தொடர்பான சட்டங்கள் 2016 ஆம் ஆண்டின் 6வது நுன்நிதிச்சட்டம் மற்றும் ஒப்பந்தச்சட்டம்)
வட்டி
குறைந்தது: 35.00%
கூடியது: 38.00%
அபராத கட்டணம் இல்லை
பிற கட்டணங்கள்
சேவைக்கட்டணம்: கடன் தொகையில் 3.00%
கடன் மேலாண்மை நிதி: கடன் தொகையில் 1.50%
நுழைவுக்கட்டணம்: ரூ.500/- (முதல் வட்டத்திற்கு மட்டும்)
சேமிப்புக் கணக்கு வைப்புக்கட்டணம்: ரூ.600/-
முத்திரை வரி: கடன் தொகையில் 0.1% (கோரிக்கை முன்மொழிவிற்கேற்ப)
காரணியாக்கம்
காரணியாக்கம் என்பது ஒரு வணிக மூலதன தீர்வாகும். இது கடன் விதிமுறைகளில் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் வணிகத்தின் பணப்புழக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் அவ்வாறு செய்யாவிட்டாலும் விநியோகம் செய்யப்பட்ட தயாரிப்புகள் அல்லது வழங்கப்படும் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பட்டியல்களில் பணத்தைச் சேகரிப்பதற்கான விரைவான வழி இதுவாகும்.
இம்முறையில் உங்கள் கணக்கில் பெறத்தக்கவை (கடன் விற்பனையில்) தள்ளுபடியில் வழங்குகின்றோம். மேலும் 70% - 80% வரை முற்பணம் செலுத்துகிறோம். கடனாளிகள் பணம் செலுத்தும் வரை கடனாளிகள் சார்பாக நாங்கள் உங்களிக்கு பணம் செலுத்துகிறோம். காரணிப்படுத்தல் உங்கள் வணிகத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவுகிறது. அதே நேரத்தில் கடன் நிர்வாகத்தின் சிக்கலை காரணியாக்கம் மாற்றும்.
சிங்களம்
தமிழ்
தங்கம் அல்லது தங்க நகைகளை (16K-24K) வைத்திருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப்பிரைஜைகள் தங்கக்கடன் வசதியைப் பெறலாம்.
கடனின் தவணைக்காலம் 1/3/6/9 மற்றும் 12 மாதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படலாம். உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் நிலையான வட்டி விகிதம் என்பது கடனை வழங்கும் போது வழங்கப்படும் தங்கக்கடன் சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையில் வட்டி வசூலிக்கப்படும்.
தயாரிப்பின் முக்கிய அம்சங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட நகைகளுக்கு தங்கக்கடனைப் பெற்றிருந்தால் ஒரு நகையினை பிரித்தெடுக்கும் அம்சம்
முன் அறிவித்தல் இன்றி உங்களால் அல்லது உங்களால் பரிந்துரைக்கப்படும் நபரால் பணம் செலுத்தும் திறன்.
நாடளாவிய ரீதியில் 450 இற்கும் மேற்பட்ட இடங்களில் உங்கள் வசதிக்கேற்ப தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் முறை.
நம்பகமான சிறப்புடன் கூடிய உயர்ந்த பாதுகாப்பு மற்றும் உங்கள் மதிப்புமிக்க பொருளுக்கு 100% இலவச காப்புறுதி.
முதல் 10 நாட்களுக்கு வட்டி வசூழிக்கப்படமாட்டது.
தொந்தரவு இல்லாத சேவை.
முன்னறிவுப்பு இல்லாமல் நகைகளை மீட்டெடுக்கும் திறன்.
கவர்ச்சி கரமான வட்டி விகிதங்களுடன் அதி கூடிய முற்பணம்
1,3,6,9, மற்றும் 12 மாதங்களில் திருப்பிச்செலுத்தும் விதிமுறைகள்
நன்கு பயிற்சி பெற்ற அனுபவம் மிக்க நட்பு ஊழியர்கள்
தங்கக்கடன் தொடர்பான சட்டங்கள் 1949 ஆம் ஆண்டின் அடனாச்சட்டம் எண் 06 (பிரிவு 85,86,87 88)
வட்டி
குறைந்தது : 16.80%
கூடியது : 24.48%
அபராதம் : 6%
சேவைக் கட்டணம்
வழங்கும் தொகை < 100,000 வழங்கும் தொகையில் 1.50%
வழங்கும் தொகை 100,000 < 500,000 வழங்கும் தொகையில் 1.25%
வழங்கும் தொகை > 500,000 வழங்கும் தொகையில் 1.00%
சிங்களம்
தமிழ்