banner-image overlay

SINGER FINANCE QUICK DRAFT Facility

சிங்கர் பினான்ஸ் துரித வரைவோலை மூலமாக நிதியை உடனடியாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு.

உங்களது அவசர தேவையின் போது சௌகரியமான மற்றும் நம்பகமான நிதியுதவி.

image

உங்களுடைய வாகனத்தின் பதிவுப்புத்தகத்தை அடமானமாக வைப்பதன் மூலமாக, நிதியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை சிங்கர் பினான்ஸ் துரித வரைவோலை உங்களுக்கு வழங்குகின்றது. 12 மாதங்கள் தவணை வரை நீடிக்கின்ற கடனை நீங்கள் பெற்றுக்கொள்ள முடிவதுடன், ஒவ்வொரு மாதமும் வட்டியை மாத்திரமே நீங்கள் செலுத்த வேண்டும். முதல் தொகையை உங்களுடைய வசதிக்கேற்ப செலுத்த முடிவதுடன், நிலுவையாக உள்ள தொகையின் அடிப்படையில் மீதமுள்ள வட்டித்தொகை மீள்கணிப்பீடு செய்யப்படும். எமது இலகுவான விண்ணப்ப நடைமுறை மற்றும் துரிதமாக பணத்தை வழங்குதல் ஆகியன உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் போது, எவ்வித தாமதமும் இன்றி நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

  • உங்களுடைய வாகனத்தைப் பொறுத்து விரைவான மற்றும் இலகுவான கடன்.
  • 12 மாதங்கள் வரையான தவணை.  
  • ஒவ்வொரு மாதமும் வட்டியை மாத்திரமே செலுத்த வேண்டிய தேவை.
  • 12 மாத காலத்தில் முதல் தொகையை எந்நேரமும் மீளச் செலுத்துவதற்கான நெகிழ்வு


தேவையான ஆவணங்கள்

  • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம்

  • கடந்த இரு ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதி கணக்குக்கூற்றுகள் / கிடைக்கப்பெறும் கடைசி மாதம் வரையான வரைவு கணக்குக்கூற்றுகள் அல்லது விண்ணப்பதாரியின் மாதாந்த வருமானத்தை நிரூபிப்பதற்கான செல்லுபடியான ஆவணங்கள்.

  • கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கிக் கணக்குக்கூற்றுகள்

  • பூரணப்படுத்தப்பட்ட பிணையாளியின் கூற்றுக்கள்

  • வணிக பதிவு/கூட்டிணைப்பு சான்றிதழ்

  • பணிப்பாளர்கள்/பங்காளர்கள் விபரங்கள்

  • விண்ணப்பதாரி ஒரு நிறுவனம் எனில், கம்பனி காரியதரிசியால் உறுதிப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு விதிகள்

  • கடந்த 03 காலாண்டுகளுக்கான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT)/பெறுமதி சேர் வரி (VAT) செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டுக்கள்

  • விண்ணப்பதாரி ஒரு நிறுவனம் எனில், வருமான வரி செலுத்தியமைக்கான படிவங்கள்

  • நிரந்தர முகவரியை உறுதிப்படுத்துவதற்கான கட்டணப் பட்டியல் அத்தாட்சி

  • தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரத்தின் நகல் பிரதிகள்

  • வழங்குபவரின் விலைப்பட்டியல்

QUICK DRAFT பற்றிய பிரபலமான கேள்விகள்

 நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை ஆகியவற்றுக்கு நாம் பெயர்பெற்றுள்ளதுடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மிகச் சிறந்த நிதித் தீர்வுகளை நீங்கள் பெற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்கின்றோம்.  

உங்களுக்குத் தேவையான நிதியை குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான அங்கீகாரங்களுடன், கடன் நடைமுறையை இலகுவானதாக, விரைவானதாக மாற்றுவதில் எமது அணி அர்ப்பணிப்புடன் உள்ளது. 

 ஆம்! உங்களுடைய கடன் விதிமுறைகளை உங்கள் கையில் வைத்திருக்க இடமளித்து, உங்களுக்குடைய நிதித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம்.  

எங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

நான் ஆர்வமாக இருக்கிறேன் SINGER FINANCE QUICK DRAFT Facility

இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.