banner-image overlay

ஃபெக்டரிங்

சிங்கர் பினான்ஸ் ஃபெக்டரிங் சேவை மூலமாக உங்களது பணப்புழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுடைய விலைப்பட்டியல்களை உடனடியாகவே தொழிற்படு மூலதனமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

image

பொருட்களை அல்லது சேவைகளை கடன் அடிப்படையில் விற்பனை செய்கின்ற வணிகம் ஒன்றின் பணப்புழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிற்படு மூலதன தீர்வே கடன் விற்பனை வருமதிக்கான நிதி வழங்கல் சேவையாகும். வங்கிகளிடமிருந்து பணம் பெற முடியாமல் போகும் சூழ்நிலைகளில் கூட கடன் விற்பனை வருமதிக்கான நிதி வழங்கல் சேவையின் மூலமாக நிதி கிடைக்கப்பெறுகின்றது. விநியோகிக்கப்பட்ட தயாரிப்புக்கள் அல்லது வழங்கிய சேவைகளுக்காக தயாரிக்கப்பட்ட விலைப்பட்டியல்களுக்கான பணத்தை விரைவாக சேகரித்துக் கொள்வதற்கான ஒரு வழியாக இது காணப்படுகின்றது.   

கடன் விற்பனை வருமதிக்கான நிதி வழங்கல் சேவையின் மூலமாக உங்களது வருமதிக் கணக்கினை (கடன் விற்பனை) தள்ளுபடி அடிப்படையில் நாம் கொள்வனவு செய்து, 70%-85% தொகையை முற்பணமாக உங்களுக்கு வழங்குகின்றோம். கடன்படுநர்கள் உரிய கொடுப்பனவுகளை செலுத்தும் வரை நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையில்லை. உங்களுடைய வணிகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, கடனை நிர்வகிக்கும் சிரமத்தை கடன் விற்பனை வருமதிக்கான நிதி வழங்கல் சேவைக்கு கைமாற்றிக் கொள்ளும் வாய்ப்பின் மூலமாக இச்சேவை உங்களுக்கு உதவுகின்றது. 


சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

  • 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகளாக இருத்தல்
  • உங்களுடைய விலைப்பட்டியல் பெறுமதியிலிருந்து 70% - 80% வரை கூடுதலான முற்பணம்
  • உங்களுடைய பணப்புழக்கத் தேவைகளுக்கான நிதியியல் தீர்வுகள்
  • ஒவ்வொரு வசதியும் அனுபவம் வாய்ந்த துறைசார் நிர்வாகத்தின் கீழ் கையாளப்படும்
  • விரைவான அங்கீகார நடைமுறை  
  • பிணை உருப்படி ஏதும் தேவையில்லை
  • இதனை ஆரம்பிப்பதற்கோ அல்லது இடை நிறுத்துவதற்கோ கட்டணம் அறவிடப்படமாட்டாது


கட்டணங்கள் மற்றும் வட்டி வீதங்கள் யாவை?

  • வட்டி வீதம் - குறைந்தபட்சம்

    AWPLR(மாதாந்திரம்) + 6% p.a

  • வட்டி வீதம் - அதிகபட்சம்

    27% p.a

  • சேவைக் கட்டணம்

    விலைப்பட்டியல் மதிப்பில் 0.5% முதல் 1% வரை

  • மீள கடன் விற்பனை வருமதிக்கான நிதி வழங்கல் சேவைக்குட்படுத்துவதற்கான கட்டணம்

    மறுகட்டமைக்கப்பட்ட மதிப்பில் 0.3% முதல் 5% வரை

  • மேலதிகமாக செலுத்தப்பட்ட தொகைக்கான கட்டணங்கள்

    ஆண்டுக்கு 36% முதல் 40% வரை

தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பப் படிவம்

  • வாடிக்கையாளரது விபரங்களை வெளிப்படுத்தும் (Know Your Customer - KYC) படிவம்

    படிவத்தைப் பதிவிறக்கவும்
  • உரிமையாளர்/பணிப்பாளர்/பிணையாளியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரத்தின் நகல் பிரதிகள்

  • உரிமையாளர்/பணிப்பாளர்/பிணையாளியின் சொத்து வெளிப்படுத்தல் பிரகடனம்

  • நிறுவனத்தின் யாப்பு மற்றும் அமைப்பு விதிகள்

  • கடன் விற்பனை வருமதிக்கான நிதி வழங்கல் சேவைக்குட்படுத்தும் கடன்படுநர்களின் பெயர்ப் பட்டியல்

  • கடந்த 6 மாதங்களுக்கான வங்கிக் கணக்குக் கூற்றுகள்

  • ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வழங்கிய ஆவணத்திலுள்ள முகவரி மாறுபடும் எனில், வாடிக்கையாளரது முகவரியை உறுதிப்படுத்துவதற்கான கட்டணப் பட்டியல் அத்தாட்சி

காரணி பற்றிய பிரபலமான கேள்விகள்

 நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை ஆகியவற்றுக்கு நாம் பெயர்பெற்றுள்ளதுடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மிகச் சிறந்த நிதித் தீர்வுகளை நீங்கள் பெற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்கின்றோம்.  

உங்களுக்குத் தேவையான நிதியை குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான அங்கீகாரங்களுடன், கடன் நடைமுறையை இலகுவானதாக, விரைவானதாக மாற்றுவதில் எமது அணி அர்ப்பணிப்புடன் உள்ளது.   

ஆம்! உங்களுடைய கடன் விதிமுறைகளை உங்கள் கையில் வைத்திருக்க இடமளித்து, உங்களுக்குடைய நிதித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம்.  

எங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

நான் ஆர்வமாக இருக்கிறேன் ஃபெக்டரிங்

இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.