banner-image overlay

தனியுரிமை அறிவிப்பு

உங்களுடைய தனிப்பட்ட விபரங்களை பாதுகாத்து, ஒவ்வொரு படியிலும் உங்களுடைய தனியுரிமையை எவ்வாறு உறுதி செய்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தனியுரிமை அறிவித்தல் | சிங்கர் பைனான்ஸ் (லங்கா) பிஎல்சி

சிங்கர் பைனான்ஸ் (லங்கா) பிஎல்சி நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள், வருங்கால வாடிக்கையாளர்கள், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், நிலையான வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள், குத்தகை (லீசிங்) வாடிக்கையாளர்கள், தங்கக் கடன் வாடிக்கையாளர்கள், கடன் வாங்குபவர்கள், பிணைதாரர்கள், பெயரிடப்பட்ட நபர்கள், பயனாளிகள், பணிப்பாளர்கள், பங்குதாரர்கள், பங்குடமையாளர்கள், அங்கீகாரம்பெற்ற கையொப்பமிடுபவர்கள், உண்மையான உரிமையாளர்கள், வணிக வாடிக்கையாளர்கள், வியாபாரப் பங்குடமையாளர்கள், வழங்குநர்கள், பிரமுகர்கள், விண்ணப்பதாரர்கள், வேலை தேடும் நபர்கள், டிஜிட்டல் அலைவரிசை பயனர்கள் மற்றும் சிங்கர் பைனான்ஸின் மூலம் தனிப்பட்ட தரவுகள் செயலாக்கப்படும் பிற நபர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது.

எமது கிளைகள், இணையதளங்கள், இணையவழி வங்கிச் சேவை வலைதளங்கள், இணையவழிப் பணப்பரிவர்த்தனை வலைதளங்கள், சமூக ஊடக அலைவரிசைகள், கையடக்கத் தொலைபேசிச் செயலிகள் மற்றும் பிற டிஜிட்டல் அல்லது பௌதீக அலைவரிசைகள் வழியாக எமது தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கும் போது, சிங்கர் பைனான்ஸ் நிறுவனம் தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, சேமிக்கிறது, அங்கீகரிக்கிறது, பகிர்கிறது, பாதுகாக்கிறது மற்றும் பிற வழிகளில் செயலாக்குகிறது என்பதை இந்தத் தனியுரிமை அறிவித்தல் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், இலங்கையின் 2022 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு நாம் எவ்வாறு இணங்குகிறோம் என்பதையும் இந்த அறிவித்தல் விளக்குகிறது.

நாம் எவ்வாறு தகவல்களைச் சேகரிப்பது?

பொதுவாக, நாங்கள் உங்களிடமிருந்து நேரடியாக தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம். நீங்கள் எங்களிடம் ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்கு கோரிக்கை விடுக்கும்போதோ அல்லது விண்ணப்பிக்கும்போதோ உங்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், விளம்பரஃசந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள், இணையவழி மற்றும் இணையவழியற்ற (offline)  கணக்கெடுப்புகளை நடத்துதல், உங்களிடமிருந்து வரும் நேரடி மின்னஞ்சல்கள், எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களுக்கான பதில்கள், எங்கள் இணையதளங்கள் மற்றும் கையடக்கச் செயலிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் நீங்கள் சிங்கர் பைனான்ஸ் கிளைகளுக்கு வருகை தரும்போது எங்கள் ஊழியர்கள்ஃபிரதிநிதிகளுடனான நேரடி தனிப்பட்ட தொடர்புகள் ஆகியவற்றின் மூலமாகவும் நாங்கள் தகவல்களைச் சேகரிக்கலாம்.

மேலும், பின்வரும் மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்தியும் எமக்கு தகவல்களைச் சேகரிக்க முடியும்:

  • சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆலோசகர்கள் மற்றும் பிணைதாரர்கள்

  • இலங்கை கடன் தகவல் பணியகம்

  • இணையதள பயன்பாடு

  • கையடக்க செயலிகளின் பயன்பாடு

பிணைதாரர் ஒருவர், பெயர் குறிப்பிடப்பட்ட நபரொருவர், பணிப்பாளர், பங்குதாரர், பங்குடமையாளர், அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர், உண்மையான உரிமையாளர், ஆலோசகர், குடும்ப உறுப்பினர் அல்லது முகவர் போன்ற மற்றொரு நபரைப் பற்றிய தனிப்பட்ட தரவுகளை நீங்கள் எங்களுக்கு வழங்கினால், அந்த நபருக்கு இந்தத் தனியுரிமை அறிவித்தல் தெரிவிக்கப்பட்டிருப்பதையும், அந்தத் தனிப்பட்ட தரவுகளை எங்களுக்கு வழங்குவதற்குத் தேவையான ஒப்புதல், அதிகாரம் அல்லது பிற சட்டரீதியான அடிப்படையை அவர் பெற்றிருப்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

எமது இணையதளம், வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவும், உள்நுழையவும் (log in) தயாரிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் தகவல்களைக் கோரவும் உதவும் படிவங்களைப் பயன்படுத்துகிறது. அதில் பெயர், வேலை விபரங்கள், பதவி, தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், முகவரிஃவதிவிடம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இந்தப் படிவங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள், தேவைப்படும்போது வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன.

நாம் எவற்றைச் சேகரிக்கிறோம்?

நாங்கள் சேகரிக்கும் அல்லது பெறும் தனிப்பட்ட தரவுகளின் வகைகள், சம்பந்தப்பட்ட நபருடன் எங்களுக்கு உள்ள உறவைப் பொறுத்து மாறுபடலாம் என்பதோடு, அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

(அ). வாடிக்கையாளர்கள் மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு:

  • தொடர்புகொள்ளக்கூடிய முறை பற்றிய தகவல்கள்: பெயர்,முகவரி,மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் மிகவும் விருப்பமான தொடர்பாடல் வழிமுறை போன்றவை.

  • அடையாளத் தகவல்கள்: தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், வரிப் பதிவு இலக்கம், சாரதி அனுமதிப்பத்திர இலக்கம், பிறந்த திகதி, தேசியம், ஆண், பெண் பாலினம் மற்றும் திருமணமானவராஃதிருமணமாகாதவரா என்ற நிலை.

  • வாடிக்கையாளர்கள் மற்றும் உற்பத்தித் தகவல்கள்: வாடிக்கையாளர் இலக்கம், கணக்கு விபரங்கள், நிலையான வைப்பு விபரங்கள், சேமிப்புக் கணக்கு விபரங்கள், குத்தகை வசதி விபரங்கள், தங்கக் கடன் விபரங்கள், விண்ணப்ப விபரங்கள், வசதி விபரங்கள், திருப்பிச் செலுத்தும் விபரங்கள் மற்றும் பரிவர்த்தனை வரலாறு போன்றவை.

  • வங்கி மற்றும் நிதித் தகவல்கள்: கணக்குத் தகவல்கள், கடன் வாங்குதல் பற்றிய தகவல்கள், வங்கிப் பரிவர்த்தனைகள், சேமிப்பு கணக்கு விபரங்கள், வங்கி அறிக்கைகள், வருமான விபரங்கள், வேலைவாய்ப்பு அல்லது வணிக விபரங்கள், நிதி ஆதாரங்கள், சொத்து ஆதாரங்கள், சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் வரி தொடர்பான தகவல்கள் ஆகியவை அடங்கும்.

  • கடன் மற்றும் இடர் தகவல்கள்: கடன் தகைமை, திருப்பிச் செலுத்தும் திறன், இலங்கை கடன் தகவல் பணியகத்தின் அறிக்கைகள், கடன் வரலாறு, பிணைதாரர் விபரங்கள், பிணைமுறி அல்லது பிணையங்கள் பற்றிய விபரங்கள், மதிப்பீட்டு விபரங்கள் மற்றும் காப்புறுதி விபரங்கள் போன்றவை

  • வாடிக்கையாளர் சரிபார்ப்பு மற்றும் இணக்கத் தகவல்கள்: KYC (Know Your Customer) தகவல்கள், AML/CFT (பணத்தூய்தாக்கல் தடுப்பு/பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல்) தகவல்கள், தடைகள் சரிபார்ப்பு முடிவுகள், அரசியல் செல்வாக்குள்ள நபர்கள் (PEP) தகவல்கள், நிதி ஆதாரங்கள், சொத்து ஆதாரங்கள் மற்றும் தொடர்புடைய ஒழுங்குறுத்துகை தகவல்கள்.

  • டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள்: இணையதளப் பயன்பாடு, இணைய வங்கிப் பயன்பாடு, மொபைல் செயலிப் பயன்பாடு, IP முகவரி, சாதனத் தகவல்கள், உள்நுழைவுப் பதிவுகள் (login records), பரிவர்த்தனைப் பதிவுகள் (transaction logs), அங்கீகாரப் பதிவுகள், பாதுகாப்புப் பதிவுகள் மற்றும் மோசடித் தடுப்புத் தகவல்கள்.

  • தொடர்பாடல் தகவல்கள்: அழைப்புப் பதிவுகள், குறுஞ்செய்திப் பதிவுகள், மின்னஞ்சல் கடிதப் பரிமாற்றங்கள், WhatsApp அல்லது பிற செய்தியனுப்பும் பதிவுகள், முறைப்பாட்டுப் பதிவுகள், சேவைக் கோரிக்கை பதிவுகள் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு வரலாறு.

  • ஒப்புதல் மற்றும் சுயவிருப்பு குறித்த தகவல்: தனியுரிமை அறிவித்தல் குறித்த விழிப்புணர்வை உறுதிப்படுத்துதல், சந்தைப்படுத்தல் ஒப்புதல், தகவல்தொடர்பு விருப்பத்தெரிவுகள், விலகல் கோரிக்கைகள் (opt-out requests)  மற்றும் வழங்கப்பட்ட ஒப்புதலை இரத்துச்செய்வதற்கான அறிக்கை.

  • கூருணர்வுமிக்க தனிப்பட்ட தகவல்கள்: (பொருந்தக்கூடிய வகையில்) சுகாதாரத் தகவல்கள், ஒரு குற்றவியல் குற்றத்திற்கான தண்டனைத் தீர்ப்பு பற்றிய தகவல்கள், பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகாரத் தரவுகள் (அத்தகைய தொழில்நுட்பம் சட்டத்தால் பயன்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டால்), மற்றும் தேவைப்படும் இடங்களில் உரிய பாதுகாப்புகளுடன் ஒரு குழந்தை தொடர்பான தனிப்பட்ட தரவுகள் ஆகியவை அடங்கும்.

(ஆ). வணிகப் பங்குடமையாளர்கள் மற்றும் வழங்குநர்களுக்கு:

  • தொடர்புகொள்ளக்கூடிய விதம் குறித்த தகவல்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை).

  • அடையாளத் தகவல்கள்: (தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், வரிப் பதிவு இலக்கம், சாரதி அனுமதிப்பத்திர இலக்கம், பிறந்த திகதி போன்றவை).

  • வணிகத் தகவல்கள்: (நிறுவனத்தின் பெயர், பதவி, திணைக்களம், அலுவலக முகவரி, நிறுவன அமைப்பு, பங்குதாரர் விபரங்கள், பணிப்பாளர் பதவிகள் போன்றவை).

  • எமது தொடர்பாடல் தளம்(கள்) மூலம் பெறப்பட்ட எந்தவொரு பதிவுகளும் (தொலைபேசிப் பதிவுகள், Microsoft Teams, Zoom போன்றவை)

  • வணிகப் பதிவு ஆவணங்களில் அடங்கியுள்ள தகவல்கள், மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு ஆவணங்கள், வர்த்தகப் பரிந்துரைகள் மற்றும் கடன் பரீட்சிப்புக்கள்

  • வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு அறிக்கைகள் உள்ளிட்ட நிதி விபரங்கள்.

(இ). எமது ஏதேனுமொரு வளாகத்திற்கு அல்லது நிகழ்வுக்கு வருகை தரும் பிரமுகர்களுக்கு:

  • தொடர்புகொள்ளக்கூடிய வழிமுறை பற்றிய தகவல்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை).

  • அடையாளத் தகவல்கள்: (தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், போன்றவை)

  • வியாபாரத் தகவல்கள் (நிறுவனத்தின் பெயர், முதலியன).

  • வருகைக்கான காரணம்

  • வருகைத் திகதி மற்றும் நேரம்

  • உயிரியல் அளவீட்டு அல்லது முக அங்கீகாரத் தரவு (அத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, சட்டத்தால் அனுமதிக்கப்பட்டால்).

  • பாதுகாப்புக் குறிப்புகள்: (விசேட அறிவுறுத்தல்கள் மற்றும் அணுகல் கட்டுப்பாடுகள்).

  • எமது கண்காணிப்புக் கேமரா (CCTV) அமைப்பு அல்லது வேறு ஏதேனும் பதிவு செய்யும் அமைப்பு மூலம் படம்பிடிக்கப்பட்டது அல்லது பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் புகைப்படங்கள் மற்றும்/அல்லது வீடியோக்கள்.

  • நீங்கள் எங்கள் வளாகங்களில் ஏதேனும் ஒன்றிற்குள் நுழைந்தாலோ அல்லது எங்கள் நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் கலந்துகொண்டாலோ, இந்தத் தனிப்பட்ட தரவுகளை வழங்க வேண்டியிருக்கும்.

(ஈ). தொழிலுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பதாரர்கள், பயனாளிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களுக்கு:

  • தொடர்புத் தகவல்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை).

  • அடையாளத் தகவல்கள்: (தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், பிறந்த திகதி மற்றும் பிற அடையாளத் தகவல்கள்)

  • மக்கள்தொகைத் தகவல்கள்: (வயது வரம்பு, திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா என்ற நிலை, பாலினம் போன்றவை),

  • நிதி நிலைமை குறித்த தகவல்கள் (பெற்றோரின் வருமானம், பயனாளிகளின் வருமானம், வங்கிக் கணக்கின் பெயர் மற்றும் இலக்கம் போன்றவை).

  • கல்வி தொடர்பான தகவல்கள் (கல்வித் துறை, பல்கலைக்கழகம், கல்வி கற்ற நாடு, கல்வி மதிப்பெண்கள் மற்றும் சாதனைகள், தொழில்முறைச் சான்றிதழ்கள் போன்றவை).

  • தொழில் தொடர்பான தகவல்கள் (நிறுவனத்தின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் வகித்த பதவி, சேவைக்காலம் போன்றவை).

  • எமக்கு சமர்ப்பிக்கப்படும் ஏதேனும் புகைப்படம்(கள்) அல்லது காணொளிக் காட்சி(கள்): (சுயவிபரப் படங்கள், போட்டிகள்) சமர்ப்பிப்புகள், முதலியன)

  • வாடிக்கையாளர் இணக்கத் தகவல் (அரசியல் செல்வாக்குள்ள நபர்கள் (PEPs) பற்றிய தகவல் - இதில் பதவிப் பெயர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் அடங்கும், இவை அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடும்).

  • உணர்திறன் மிக்க தனிப்பட்ட தகவல்கள்: (குற்றவியல் தண்டனைத் தீர்ப்புகள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஒரு குழந்தை தொடர்பான தனிப்பட்ட தரவுகள்)

குழந்தைகளின் தனிப்பட்ட தரவு

பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலரின் சரிபார்க்கப்பட்ட ஒப்புதல் இல்லாமல், 18 வயதுக்கு குறைந்த நபர்களிடமிருந்து நாங்கள் தெரிந்தே தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதில்லை. அத்தகைய தரவுகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்க, அந்தத் தரவுகள் சட்டரீதியாகவும் பொறுப்புடனும் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நாம் சேகரிக்கும் மேலதிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள்

  • சுகாதார தகவல்

நாங்கள் சேகரிக்கும் மேலதிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள் (நெருக்கடியான சந்தர்ப்பங்களில்)

  • போர், பயங்கரவாதம், கலவரங்கள், இயற்கை பேரழிவுகள், சுகாதார நெருக்கடிகள் அல்லது நோய்த் தொற்று பரவல்கள் போன்ற நெருக்கடியான காலங்களில், எமக்கு பின்வருவனவற்றை சேகரிக்க முடியும்.

  • சுகாதாரம் மற்றும் உடல் நிலை

  • உங்கள் வீட்டில் உள்ளவர்களின் சுகாதார நிலை

  • உங்கள் சுகாதாரப் பரிசோதனைகளின் பெறுபேறுகள் (ஏதேனும் இருந்தால்)

  • நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தாலும் அல்லது இருந்திருந்தாலும்

  • உடல் வெப்பநிலை

இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் நீங்கள் எங்கள் வளாகங்களுக்குள் நுழைந்தாலோ அல்லது எங்கள் நிகழ்வுகளில் கலந்துகொண்டாலோ, இந்த மேலதிகமான முக்கியமான தனிப்பட்ட தரவுகளை வழங்குவது கட்டாயமாகும்.

நாம் ஏன் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம்?

  • உங்களுடன் தொடர்புகொள்வதற்கும், உங்கள் வினவல்கள், கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளுக்குப் பதிலளிப்பதற்கும்.

  • விண்ணப்பங்கள், கணக்குகள், வைப்புத்தொகைகள், வசதிகள், குத்தகைகள், தங்கக் கடன்கள் மற்றும் பிற பொருட்கள் அல்லது சேவைகளை மதிப்பீடு செய்தல், செயலாக்குதல், அங்கீகரித்தல், நிராகரித்தல், நிர்வகித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.

  • அடையாளத்தைச் சரிபார்க்கவும், வாடிக்கையாளர் குறித்த முழுமையான ஆய்வு, KYC,AML/CFT, தடைகள் குறித்த சோதனைகள், PEP பரிசோதனைகள் மற்றும் பிற ஒழுங்குறுத்துகைப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.

  • கடன் தகைமை, திருப்பிச் செலுத்தும் திறன், நிதி நிலை, நிதி ஆதாரங்கள், சொத்து ஆதாரங்கள், பிணையங்கள், உத்தரவாதங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அபாயங்களை மதிப்பிடுவதற்கு.

  • இலங்கை கடன் தகவல் பணியகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஒழுங்குறுத்துகை அமைப்புகள் மற்றும் பிற முறையான சரிபார்ப்பு ஆதாரங்களுக்கு தகவல்களைப் பெறுதல், சமர்ப்பித்தல், புதுப்பித்தல், வெளிப்படுத்துதல் மற்றும் சரிபார்த்தல்.

  • கடன் வசதிகளுக்கான சேவையை நிர்வகித்தல், திருப்பிச் செலுத்துதல்களைக் கண்காணித்தல், அறவிடுதல்கள், மீட்புகள், மறுசீரமைப்பு, சட்ட நடவடிக்கைகள், பிணையங்கள் மற்றும் உத்தரவாதங்களின் நிர்வாகம் மற்றும் அமுலாக்கம்.

  • மோசடி, நிதிக்குற்றங்கள், இணையவழி அச்சுறுத்தல்கள், அங்கீகரிக்கப்படாத அணுகல், சேவைத் தவறான பயன்பாடு மற்றும் பிற பாதுகாப்புச் சம்பவங்களைத் தடுத்தல், கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் அவற்றுக்குப் பதிலளித்தல்.

  • இலங்கை மத்திய வங்கி, நிதிப் புலனாய்வுப் பிரிவு, இலங்கை கடன் பணியகம், நீதிமன்றங்கள், சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் பிற அதிகாரிகளின் தேவைகள் உட்பட, சட்ட, ஒழுங்குறுத்துகை, வரி, கணக்காய்வு, அறிக்கையிடல், பதிவேட்டுப் பராமரிப்பு மற்றும் நியதிச்சட்டப் பிணைப்புகளுக்கு இணங்குதல்.

  • வாடிக்கையாளர் தொடர்புகள், சேவைத் தரம், பணியாளர் பயிற்சி, பிணக்குத் தீர்வு, அழைப்புப் பதிவு, உள்ளக அறிக்கையிடல் மற்றும் செயல்பாட்டு நிர்வாகம் ஆகியவற்றை நிர்வகித்தல்.

  • சட்டத்தால் அனுமதிக்கப்பட்டவாறு, எமது தயாரிப்புகள், சேவைகள், டிஜிட்டல் சேனல்கள், வாடிக்கையாளர் அனுபவம், பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துதல்.

  • அவ்வாறு செய்வதற்கு எமக்குச் சட்டரீதியான அடிப்படை இருக்கும் பட்சத்தில், தேவைக்கேற்ப ஒப்புதல் பெறுவது உட்பட, சந்தைப்படுத்தல், ஊக்குவிப்பு, விளம்பரம் தொடர்பான அல்லது பிற தயாரிப்பு அறிமுகத் தகவல்தொடர்புகளை மேற்கொள்வது.

தரவு செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படை

சட்டரீதியான அடிப்படை இருக்கும் பட்சத்தில் மட்டுமே நாங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குகிறோம். நோக்கத்தின் அடிப்படையில், உங்களுடன் ஒப்பந்தமொன்றைச் செய்வதற்கு அல்லது அதை நிறைவேற்றுவதற்கு, சட்ட அல்லது ஒழுங்குறுத்துகை பிணைப்புகளுக்கு இணங்குவதற்கு, கடன், நடவடிக்கைகள், மோசடி மற்றும் பாதுகாப்பு அபாயங்களை மதிப்பீடு செய்வதற்கும் முகாமைசெய்வதற்கும், எமது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கு, சட்டரீதியான உரிமைகோரல்களை நிறுவுவதற்கு, செயற்படுத்த அல்லது பாதுகாக்க, பொது நலனுக்காக எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள (பொருந்தக்கூடியவாறு), அல்லது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உங்கள் சம்மதத்தைப் பெற்றிருக்கும் பட்சத்தில், நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்கலாம்.

உங்கள் அனுமதியானது பொதுவாக சந்தைப்படுத்தல், விளம்பரத் தகவல்தொடர்புகள், குறிப்பிட்ட குறுக்கு விற்பனைச் செயல்பாடுகள், விருப்பக் கணக்கெடுப்புகள் மற்றும் அனுமதி தேவைப்படும் பிற விருப்பச் செயலாக்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெறுவது, கடன் வசதி நிர்வாகம், சட்ட அல்லது ஒழுங்குமுறை இணக்கம், மீட்பு, மோசடித் தடுப்பு, பாதுகாப்பு, கணக்காய்வு, அறிக்கையிடல் அல்லது பிற முறையான நோக்கங்களுக்காகத் தேவையான தரவுச் செயலாக்கத்தைப் பாதிக்காது.

சேகரிக்கப்பட்ட தகவலின் பாதுகாப்பு

சட்டத்தால் வேறுவிதமாக அனுமதிக்கப்பட்டாலோ அல்லது தேவைப்பட்டாலோ தவிர, சிங்கர் பைனான்ஸ் தனிப்பட்ட தரவுகளை இந்தத் தனியுரிமை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகவோ அல்லது அந்த நோக்கங்களுடன் ஒத்துப்போகும் பிற நோக்கங்களுக்காகவோ மட்டுமே பயன்படுத்தும். தேவைப்படும் இடங்களில், இலங்கை கடன் தகவல் பணியகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஒழுங்குறுத்துகை நிறுவனங்கள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள், நீதிமன்றங்கள், கணக்காய்வாளர்கள், காப்புறுதிதாரர்கள், மதிப்பீட்டாளர்கள், சட்ட மற்றும் மீட்பு முகவர்கள், பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள், cloud/SaaS வழங்குநர்கள், ஆவண சேமிப்பு வழங்குநர்கள், தொழில்முறை ஆலோசகர்கள் மற்றும் எங்கள் சார்பாகச் செயல்படும் பிற சேவை வழங்குநர்கள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பகிரலாம். மூன்றாம் தரப்பு தரவுச் செயலாக்கிகள், பொருந்தக்கூடிய சட்டம், தனியுரிமைக் கடமைகள், பாதுகாப்புத் தேவைகள் மற்றும் எங்கள் அறிவுறுத்தல்களுக்கு இணங்க தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

தேவையைப் பொறுத்து, நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளை இலத்திரனியல் மற்றும்/அல்லது பௌதீக வடிவில் சேகரித்து சேமிக்கக்கூடும். இந்தத் தகவல்கள் எங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வளாகங்களிலும், தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிலும் (உ.ம்: வெளிப்புற cloud சேமிப்பகம், உள்ளக அல்லது மூன்றாம் தரப்பு முகாமைத்துவக் கட்டமைப்புகள், மின்னஞ்சல், தரவுத்தளங்கள், வன்வட்டுகள்), ஆவணச் சேமிப்பகம் போன்றவற்றிலும் சேமிக்கப்படலாம்.

உங்கள் தனிப்பட்ட தரவுகளை ஒரு பாதுகாப்பான சூழலில் செயலாக்குவதற்கும், அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோதமான தனிப்பட்ட தரவு செயலாக்கத்திலிருந்தோ, அல்லது அத்தகைய தகவல்களுக்கு ஏற்படும் தற்செயலான இழப்பு, அழிவு அல்லது சேதத்திலிருந்தோ பாதுகாப்பதற்கும் நாங்கள் நியாயமான முயற்சிகளை மேற்கொள்வோம். அங்கீகரிக்கப்படாத அணுகலிலிருந்து உங்கள் தனிப்பட்ட தரவுகளையும் எங்கள் வலையமைப்பையும் பாதுகாக்க, நாங்கள் பல்வேறு பௌதீக, தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளில் சில பின்வருமாறு:

  • பரிமாற்றத்தில் உள்ள அல்லது சேமிப்பில் உள்ள தரவைக் குறியாக்கம் செய்தல்.

  • தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல்.

  • எங்கள் நடைமுறைகளை நவீனமயமாக்குவதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதுகாப்பு மதிப்பீடுகளையும் ஆய்வுகளையும் நடாத்துதல்.

  • அத்தகைய தரவுகளைப் பற்றி அறிய வேண்டிய தேவை உள்ள (need to know) பணியாளர்களுக்கு மட்டும் அணுகலைக் கட்டுப்படுத்துதல்.

  • உங்கள் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலாக்க நடவடிக்கைகளுக்காக, தரவுப் பாதுகாப்பு தாக்க மதிப்பீடுகளை (Data Protection Impact Assessments - DPIAs) நடத்துதல்.

உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில், உங்கள் தகவலைப் பாதுகாக்க நீங்களும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊக்குவிக்கிறோம். இதில் உங்கள் உள்நுழைவு விபரங்களைப் (login credentials) பாதுகாத்தல், உங்கள் சாதனங்களைப் பாதுகாத்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத செயல்பாடு குறித்து சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக எங்களுக்குத் தெரிவித்தல் ஆகியவை அடங்கும். இந்த முன்னெச்சரிக்கைகள் உங்கள் தரவிற்கு ஒரு பாதுகாப்பான சூழலைப் பராமரிக்க எங்களுக்கு உதவுகின்றன.

எங்கள் சார்பாகத் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குவதற்காக நாங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களை (உதாரணம்: மென்பொருள் விற்பனையாளர்கள், உட்கட்டமைப்பு வழங்குநர்கள்) ஈடுபடுத்தும்போது, ​​அந்தச் செயலாக்கிகள் எங்கள் தரவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்குவதற்கு ஒப்பந்த ரீதியாகக் கட்டுப்பட்டிருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

எல்லை தாண்டிய தரவு செயலாக்கம் மற்றும் வெளிநாட்டு பரிமாற்றங்கள்

வெளிநாடுகளில் அமைந்துள்ள cloud சேவைகள், தொழில்நுட்பத் தளங்கள், உதவி  சேவைகள், குழும அமைப்புகள், சேவை வழங்குநர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பு தரவுச் செயலாக்கிகளை நாங்கள் பயன்படுத்தும் இடங்களில், உங்கள் தனிப்பட்ட தரவுகள் இலங்கைக்கு வெளியே செயலாக்கப்படலாம், சேமிக்கப்படலாம் அல்லது அணுகப்படலாம். தனிப்பட்ட தரவுகள் இலங்கைக்கு வெளியே மாற்றப்படும்போது அல்லது அணுகப்படும்போது, ​​பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்க, பொருத்தமான ஒப்பந்த, தொழில்நுட்ப மற்றும் நிறுவனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

தரவு மீறல்கள் பற்றிய அறிவிப்பு

உங்கள் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய தனிப்பட்ட தரவு மீறல் ஏதேனும் ஏற்பட்டால், நாங்கள் தேவையற்ற தாமதமின்றி உங்களுக்குத் தெரிவிப்போம். மேலும், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி, அந்தச் சம்பவத்தைத் தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடளிப்போம். தரவு மீறல் தொடர்பான தகவல்கள் மற்றும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.

சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்திருத்தல்

உங்கள் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான காலத்திற்கு மட்டுமே நாங்கள் அவற்றை வைத்திருக்கிறோம், மேலும் இந்தத் தக்கவைப்புக் காலங்கள் சட்ட, ஒழுங்குறுத்துகை மற்றும் செயற்பாட்டுத் தேவைகளைப் பொறுத்து மாறுபடலாம். சில சந்தர்ப்பங்களில், சட்டம் அல்லது ஒழுங்குவிதிகள் மூலம் தேவைப்பட்டால், எமக்கு தரவுகளை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும் என்பதோடு, அந்த நோக்கங்களுக்கு இனி தேவைப்படாதபோது அவற்றை பாதுகாப்பாக நீக்கிவிடுவோம். பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டு, தரவுகளைச் செயலாக்குவதை நீங்கள் எதிர்த்தால் மற்றும் செயலாக்கத்தைத் தொடர வேறு சட்டரீதியான அடிப்படை இல்லாத பட்சத்தில், எமக்கு குறுகிய காலத்திற்குள் அந்தத் தரவுகளை நீக்கிவிட முடியும்.

வாடிக்கையாளர் அறிக்கைகள், கடன் வசதி அறிக்கைகள், இலங்கை கடன் தகவல் பணியகம்/கடன் மதிப்பீட்டு அறிக்கைகள், பரிவர்த்தனை அறிக்கைகள், CCTVபதிவுகள், அழைப்புப் பதிவுகள், பார்வையாளர் பதிவுகள், ஒப்புதல் படிவங்கள், முறைப்பாட்டுப் பதிவுகள், டிஜிட்டல் அணுகல் பதிவேடுகள் மற்றும் ஒழுங்குறுத்துகை அறிக்கைகள் உள்ளிட்ட தரவுகளின் வகைப்பாட்டைப் பொறுத்து, தரவு தக்கவைப்புக் காலங்கள் மாறுபடலாம்.

சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் விருப்பத்தேர்வுகள்

சந்தைப்படுத்தல், விளம்பரங்கள், அறிவிப்புகள் அல்லது தயாரிப்புத் தகவல்களை உங்களுக்கு SMS, தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல், WhatsApp, சமூக ஊடகங்கள், push notifications அல்லது பிற தகவல் தொடர்பு வழிகள் மூலம் அனுப்புவதற்கு எங்களிடம் சட்டரீதியான அடிப்படை இருக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் உங்கள் அனுமதியுடன் உங்கள் தொடர்பு விபரங்களை எமக்கு பயன்படுத்தலாம்.

சிங்கர் பைனான்ஸ் வழங்கும் வழிகள் மூலம், சந்தைப்படுத்தல் தகவல்களைப் பெறுவதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம் அல்லது உங்கள் தகவல் தொடர்பு விருப்பங்களை எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக்கொள்ளலாம். இருப்பினும், சட்டத்தால் தேவைப்படும் அல்லது அனுமதிக்கப்படும் பட்சத்தில், சேவை தொடர்பான, பாதுகாப்பு, சட்ட, ஒழுங்குமுறை, கடன் அறிவிடுதல், கணக்கு, கடன் வசதி மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து அனுப்ப முடியும்.

சேகரிக்கப்பட்ட தகவல் தொடர்பான உங்கள் உரிமைகள்

உங்கள் தனிப்பட்ட தரவுகள் துல்லியமாகவும், முழுமையாகவும், தவறாக வழிநடத்தாத வகையிலும், இற்றைப்படுத்தப்பட்ட நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நாங்கள் உங்கள் உரிமைகளையும் தனியுரிமையையும் மதிக்கிறோம். இலங்கையின் 2022 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி,

  • உங்களைப் பற்றிய என்னென்ன தனிப்பட்ட தரவுகளை நாங்கள் வைத்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு உரிமை உண்டு, மேலும்,

  • உங்கள் தனிப்பட்ட தரவுகளின் பிரதியைக் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

  • உங்கள் தனிப்பட்ட தரவுகள் துல்லியமானவை, முழுமையானவை, தவறாக வழிநடத்தாதவை மற்றும் புதுப்பித்த நிலையில் உள்ளதை உறுதி செய்வதற்காக, அவற்றைச் சரிசெய்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

  • தரவுச் செயலாக்கம் உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் அமைந்திருந்தால், எந்த நேரத்திலும் உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு. மேலும், ஒப்புதலைத் திரும்பப் பெறுவது, அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தரவுச் செயலாக்கத்தையோ அல்லது ஒப்பந்தங்கள், சட்ட/ஒழுங்குறுத்துகை கடமைகள், கடன் அறவிடல், மோசடி தடுப்பு, பாதுகாப்பு, கணக்காய்வு, அறிக்கையிடல் அல்லது சட்டப்பூர்வ உரிமைகோரல்கள் போன்ற மற்றொரு சட்டரீதியான அடிப்படையில் தொடரும் தரவு செயலாக்கத்தையோ பாதிக்காது.

  • தீங்கு அல்லது மன உளைச்சல் ஏற்படும் அபாயம் இருக்கும் பட்சத்தில், உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் பயன்படுத்தும் விதத்தைக் கட்டுப்படுத்தக் கோருவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

  • நேரடி சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

  • 2022-ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறும் வகையில் உங்களின் தனிநபர் தரவுகள் கையாளப்பட்டதாக நீங்கள் நம்பினால், இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய உங்களுக்கும் உரிமை உண்டு.

என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

உங்கள் உரிமைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

இந்தத் தனியுரிமை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பாடல் தகவல்களைப் பயன்படுத்தி தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்புகொள்வதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தரவை அணுகுதல், திருத்துதல் அல்லது புதுப்பித்தல், ஒப்புதலின் அடிப்படையில் தரவுச் செயலாக்கம் மேற்கொள்ளப்படும் வேளைகளில் அந்த ஒப்புதலை வாபஸ் பெறுதல், நேரடிச் சந்தைப்படுத்தலை எதிர்த்தல் அல்லது தனியுரிமை தொடர்பான கவலையை எழுப்புதல் உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பான கோரிக்கைகளை நீங்கள் முன்வைக்கலாம்.

உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க, உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்கு முன்பு, நாங்கள் உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, மேலதிக தகவல்களைக் கோரலாம். பொருந்தக்கூடிய சட்ட, ஒழுங்குறுத்துகை, ஒப்பந்த, கடன் அறவீடு அல்லது மீட்பு, மோசடி தடுப்பு, பாதுகாப்பு, கணக்காய்வு அல்லது பதிவேடு பராமரிப்புத் தேவைகளுக்கு உட்பட்டு, பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படும் காலக்கெடுவிற்குள் அத்தகைய கோரிக்கைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்து பதிலளிப்போம்.

ஒரு கோரிக்கையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எங்களால் நிறைவேற்ற முடியாத சந்தர்ப்பங்களில், சட்டத்தின் மூலம் தேவைப்படும் அல்லது அனுமதிக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணத்தை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.

தானியங்கு முடிவெடுத்தல் மற்றும் சுயவிவர உருவாக்கம்

சில சமயங்களில், உங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்க நாங்கள் தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்துவோம். நிதித் தயாரிப்புகளுக்கான தகைமையை மதிப்பிடும்போது, ​​கடன் மதிப்பெண் மற்றும் இடர் மதிப்பீடுகளுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். அத்தகைய சந்தர்ப்பங்களில், உங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்க நாங்கள் தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்துவோம்.

  • முழுவதும் தானியங்கி முறையில் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவையும் மனித மறுஆய்வுக்கு உட்படுத்தக் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

  • அந்த முடிவை எதிர்த்துப் போராடவும், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும் உங்களுக்கு அதிகாரம் உள்ளது.

இதுபோன்ற ஆள் அடையாளம் காணும் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும், வழக்கமான மறுஆய்வுக்கு உட்பட்டதாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

வர்த்தக முத்திரைகள்

இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கர் பைனான்ஸ் லங்கா பிஎல்சி என்பது சிங்கர் (லங்கா) பிஎல்சி-யின் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரைகள் ஆகும்.

காப்புரிமை

இந்த இணையத்தளத்தின் ஒரு பகுதியாக உள்ள அனைத்துப் பொருட்களும் பதிப்புரிமை பெற்றவை மற்றும்/அல்லது சிங்கர் (லங்கா) பிஎல்சி அல்லது அதன் வழங்குநர்களுக்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்படும் அல்லது உரிமம் பெற்ற பிற புலமைச் சொத்துக்கள் என்பதோடு, அவை பதிப்புரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.

விசாரணைக்கு தொடர்புகொள்ளக்கூடிய வழிமுறை பற்றிய தகவல்

இந்த அறிவிப்பு, எங்கள் தனியுரிமை மற்றும் தகவல் கையாளும் நடைமுறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது விசாரணைகள் இருந்தாலோ, அல்லது தரவுடன் தொடர்புபட்டவராக உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த விரும்பினாலோ, கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

தரவுப் பாதுகாப்பு அதிகாரி

மின்னஞ்சல்: dposfl@singerfinance.com

தனியுரிமை அறிவிப்புக்கான புதுப்பிப்புகள்

இந்தத் தனியுரிமை அறிவிப்பை, தேவைக்கேற்ப அவ்வப்போது, ​​எங்கள் முழுமையான விருப்பத்தின் பேரில் திருத்தவோ, மாற்றியமைக்கவோ அல்லது புதுப்பிக்கவோ எங்களுக்கு உரிமை உண்டு. மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட தனியுரிமை அறிவிப்பு, முந்தைய பதிப்புகள் அனைத்தையும் செல்லாததாக்கும். ஏதேனும் மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள, இந்தத் தனியுரிமை அறிவிப்பை அவ்வப்போது சரிபார்க்குமாறு நீங்கள் ஊக்குவிக்கப்படுகிறீர்கள். இதன்மூலம், ஏதேனும் மாற்றங்கள் உட்பட, தனியுரிமை அறிவிப்பின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.


குக்கீஸ் குறித்த கொள்கை | சிங்கர் பைனான்ஸ் (லங்கா) பிஎல்சி

இந்தக் குக்கீஸ் கொள்கையானது, சிங்கர் பைனான்ஸ் (லங்கா) பிஎல்சி ("நாம்", "எமது" அல்லது "எமக்கு") எமது இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளில் (ஒட்டுமொத்தமாக, "இணையதளம்" என அழைக்கப்படும்) குக்கீஸ் மற்றும் அதுபோன்ற கண்காணிப்புத் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. இந்தக் கொள்கையானது இலங்கையின் 2022 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ("PDPA") இணங்க வழங்கப்படுகிறது.

நாங்கள் வெளிப்படைத்தன்மைக்கும் உங்கள் தனியுரிமைக்கும் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கொள்கை பின்வருவனவற்றை விளக்குகிறது:

  • குக்கீஸ் என்றால் என்ன?

  • நாங்கள் என்ன வகையான குக்கீஸ்களைப் பயன்படுத்துகிறோம், அது ஏன்?

  • குக்கீஸ்களை நிர்வகிப்பது அல்லது முடக்குவது எப்படி?

குக்கீஸ் என்றால் என்ன?

குக்கீஸ் என்றால் நீங்கள் ஒரு இணையதளத்தில் பிரவேசிக்கும்போது உங்கள் சாதனத்தில் (கணனி, ஸ்மார்ட்போன், டெப்லெட்) சேரும் சிறிய டெக்ஸ் கோப்புகள் (text files) ஆகும். அவை உங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலமும், சில செயல்பாடுகளை இயக்குவதன் மூலமும், நீங்கள் இணையதளத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகின்றன.

குக்கீஸ்:

முதலாம் தரப்பு குக்கீஸ் - எமது சொந்த இணையத்தளம் மூலம் அமைக்கப்படுபவை

மூன்றாம் தரப்புக் குக்கீஸ் - நாங்கள் பயன்படுத்தும் வெளிப்புறச் சேவைகளால் (உதாரணம்: பகுப்பாய்வு வழங்குநர்கள்) அமைக்கப்படுபவை ஆக இருக்கலாம்.

நாம் பயன்படுத்தும் குக்கீஸ்களின் வகைகள்

குக்கீ வகை

நோக்கம்

உதாரணம்

தடுத்து வைக்கும் காலம்

அத்தியாவசியமான

இணையதளத்தின் அடிப்படையான செயற்பாட்டிற்கு அத்தியாவசியமானது

அமர்வு அணுகல் (login), CSRF (CSRF tokens)

அமர்வு காலத்திற்கு மட்டும்

செயலாற்றுகை / பகுப்பாய்வு

இணையதளத்தில் உள்ள பயனர்கள் இடைசெயல்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

Google Analytics

 

13 மாதங்கள்

 

சந்தைப்படுத்தல் / இலக்கு

விளம்பரங்கள் அல்லது சலுகைகளுக்கான செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.

 

Facebook Pixel, Google Ads

24 மாதங்கள் வரை

 

உங்கள் முன் அனுமதியின்றி நாங்கள் சந்தைப்படுத்தல் குக்கீஸ்களை அமைப்பதில்லை.

பின்வரும் விடயங்களின் அடிப்படையில்

  • அத்தியாவசிய குக்கீஸ்களைப் பயன்படுத்துவதில் நியாயமான ஆர்வம்

  • தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 8 வது பிரிவின்படி தேவைப்படும், மற்ற அனைத்து வகையான குக்கீஸ்களுக்குமான (உதாரணம்: பகுப்பாய்வு, சந்தைப்படுத்தல்) உங்கள் ஒப்புதல்.

குக்கீஸ்களை எவ்வாறு முகாமைசெய்வது?

  • உங்கள் இணைய ஆராய்ச்சி தயாரிப்பினூடாக (browser settings) குக்கீஸ்களை செயல் இழக்கச் செய்யலாம். அறிவுறுத்தல்களுக்கு உங்கள் இணைய உலாவியின் உதவிப் (help) பகுதியைப் பார்க்கவும்.

குறிப்பு: குக்கீஸ்களை செயலிழக்கச்செய்வது இணையதளத்தின் செயற்பாட்டைப் பாதிக்கலாம்.

குக்கீஸ்களைப் பயன்படுத்துவதற்கான சட்ட அடிப்படை

பயனர் சுயவிபரங்களை உருவாக்க அல்லது தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்க சில குக்கீஸ்கள் பயன்படுத்தப்படலாம். அத்தகைய சுயவிபர உருவாக்கம் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், உங்கள் ஒப்புதலுக்கு உட்பட்டதாகவும் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுயவிபர உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

உங்கள் உரிமைகள்

இலங்கை தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உங்களுக்குப் பின்வரும் உரிமைகள் உள்ளன:

  • உங்கள் தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள,

  • உங்கள் தனிப்பட்ட தரவை அணுக,

  • அளித்த ஒப்புதலை திரும்பப் பெற,

  • நேரடி சந்தைப்படுத்தல் அல்லது சுயவிபரப்படுத்தல் உள்ளிட்ட தரவு செயலாக்கத்தை எதிர்ப்பதற்கு

dposfl@singerfinance.com என்ற முகவரியில் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் இந்த உரிமைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் நம்பினால், இலங்கைத் தரவுப் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய உங்களுக்கும் உரிமை உண்டு.

இந்த குக்கீஸ் கொள்கையில் மேற்கொள்ள முடியுமான மாற்றங்கள்

எமக்கு இந்தக் குக்கீஸ் கொள்கையை அவ்வப்போது இற்றைப்படுத்த முடியும். நாங்கள் குக்கீஸ்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தைத் தவறாமல் மீளாய்வு செய்யுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

எங்களை தொடர்பு கொள்ளவும்;

எமது குக்கீஸ்களின் பயன்பாடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருப்பின், அல்லது உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தக் கருதினால் தயவுசெய்து எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் முகவரி வழியாகத் தொடர்பு கொள்ளவும்: dposfl@singerfinance.com

இறுதியாகப் புதுப்பிக்கப்பட்டது: 09 செப்டம்பர் 2026