banner-image overlay

வீசா டெபிட் அட்டை

உங்களுடைய கொடுப்பனவுகளை வசதியான வழியில் பேணுங்கள்.

சிங்கர் பினான்ஸ் வீசா டெபிட் அட்டையுடன் தங்குதடையின்றி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்

image

உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் எமது டெபிட் அட்டை, கொள்வனவு, வெளியில் உணவு உட்கொள்வது, பிரயாணம் மேற்கொள்வதற்கான முற்பதிவு மற்றும் பலவற்றை நீங்கள் சுதந்திரமாக மேற்கொள்ள உங்களுக்கு இடமளிக்கின்றது. 24 மணி நேர சேவை மையத்தின் துணையுடன், அதியுயர் பாதுகாப்பு நெறிமுறைகளை அனுபவியுங்கள்.

சிங்கர் பினான்ஸ் சேமிப்புக் கணக்கைக் கொண்டுள்ள எவரும், எமது எந்தவொரு கிளைக்கும் வருகை தந்தோ அல்லது துரித சேவை மையத்தை அழைப்பதனூடாகவோ அட்டையொன்றுக்கு விண்ணப்பித்து, மிக இலகுவாக வீசா டெபிட் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிங்கர் வீசா டெபிட் அட்டை குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடங்கள்

சிறப்பம்சங்கள், அனுகூலங்கள் மற்றும் தகைமை

  • சிங்கர் பினான்ஸ் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் (சாதாரண சேமிப்புக்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கள்) அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட டெபிட் அட்டை விண்ணப்பப் படிவத்துடன், நாடளவிலுள்ள எந்தவொரு சிங்கர் பினான்ஸ் கிளைக்கும் வாடிக்கையாளர்கள் வருகை தர முடியும். விண்ணப்பம் குறித்த கூடுதல் தகவல் விபரங்களுக்கு எமது துரித சேவை அழைப்பு மையத்தையும் அவர்கள் தொடர்பு கொள்ள முடியும். 
  • விண்ணப்பித்த பின்னர், உரிய சிங்கர் பினான்ஸ் கிளைக்கு வருகை தருவதால் டெபிட் அட்டையை. சேகரித்துக் கொள்ள முடியும் / தரப்பட்டுள்ள முகவரிக்கு அட்டையையும், PIN விபரங்களையும் கிளை அனுப்பி வைக்கும்.
  • அட்டையை நிகழ்நேரத்தில் செயற்படுத்திக் கொள்ள முடியும்.
  • டெபிட் அட்டை மூலமாக பின்வருவனவற்றை வாடிக்கையாளர்கள் அனுபவித்து மகிழலாம்.
  • உலகளவில் எந்தவொரு வீசா ஏடிஎம் எந்திரத்தினூடாகவும் உங்களுடைய சேமிப்புக் கணக்கை அணுக முடியும்.
  • உலகளவில் வீசா வணிக மையங்களில் ஏற்றுக்கொள்ளப்படல்
  • எவ்வித கட்டணங்களுமின்றி உங்களுடைய வீசா டெபிட் அட்டை மூலமாக கொள்வனவுகளை மேற்கொள்ளலாம்
  • பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் சமயங்களில் இலவசமாக எஸ்எம்எஸ் செய்தி அறிவிப்புக்கள்
  • சௌகரியமான 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம்
  • அட்டையின் செயற்பாட்டை நிறுத்துவதற்குஇ PIN தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஏனைய தொடர்புபட்ட விடயங்களுக்கு 0112 100 100ஃ 011 1 100 100 மூலமாக எமது துரித சேவை அழைப்புமையத்தை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.


கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள்

  • அட்டைக்கான கட்டணம் - ரூபா 350/-
  • அட்டை புதுப்பித்தல் கட்டணம் - ரூபா 350/-
  • பதில் அட்டைக்கான கட்டணம் - ரூபா 350/-
  • பதில் PIN கட்டணம் - ரூபா 200/-
  • ஏடிஎம் பணம் மீளப்பெறல் கட்டணம் - ரூபா 50/-
  • PIN கட்டணம் - இலவசம்
  • அட்டையை அனுப்பி வைப்பதற்கான கட்டணம் - இலவசம்
  • எஸ்எம்எஸ் செய்தி அறிவிப்புக்கள் - இலவசம்