பொது விரைவுக் குறியீட்டு (QR) பண வசூல்

வெளியிடப்பட்டது - 03 Dec 2024
banner-image

பல தசாப்தங்களாக இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு முன்னோடி நிதிச் சேவை நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஃபினான்ஸ், இலங்கையில் முதல்முறையாக அறிமுகமாக்கப்பட்ட பொது விரைவுக் குறியீட்டு அடிப்படையிலான மொபைல் பண வசூல் சேவையின் இரண்டாவது ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியுள்ளது. நிதித் தீர்வுகளில் புரட்சிகரமாக மாற்றங்களை ஏற்படுத்துவதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பை இப்புத்தாக்கம் பிரதிபலிப்பதுடன், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்டுவதில் இது கவனம் செலுத்தியுள்ளது.