நிதி குறைகேள் அதிகாரி, இலங்கை சிங்கர் ஃபைனான்ஸ் (லங்கா) பி.எல்.சி.

தற்போது இப் பதவியை வகிக்கும் அதிகாரி திரு. ஆனந்த குமாரதாச

 

குறைகேள் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள இடம் :

null

முகவரி

No 143A, Vajira Road, Colombo 5
null

தொலைபேசி

+94 11 259 5624
null

தொலைநகல்

+94 11 259 5625
null

மின்னஞ்சல்

fosril@sltnet.lk
null

இணையத்தளம்

www.financialombudsman.lk
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் குறைகேள் அதிகாரி திட்டத்தின் கீழ் வரும் நிதி நிறுவனங்களுக்கும் இடையில் ஏதேனும் முறைப்பாடுகள் மற்றும் தகராறுகளை விசாரிப்பதற்கும் தீர்ப்பதற்கும் நிதி குறைகேள் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

இந்தத் திட்டத்தில் தாமாக முன்வந்து பங்குபெறும் நிதி நிறுவனங்கள் மாத்திரம் இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்பார்வையிடப்படுகின்றன.

குறைகேள் அதிகாரி திட்டத்தின் நோக்கம், வங்கிகள் மற்றும் திட்டத்தின் கீழ் உள்ள பிற நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அல்லது பிரச்ச்னைகளைத் திருப்திகரமான முறையில் தீர்ப்பதுடன் பங்கேற்கும் நிதி நிறுவனங்களுக்கு நாணய விருதுகளை வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருத்தல்.

குறைகேள் அதிகாரியின் செயற்பரப்பு

ஆரம்பத்தில், பங்கேற்கும் நிதி நிறுவனத்தின் எந்தவொரு வாடிக்கையாளரும் பின்வரும் எந்தவொரு காரணத்திற்காகவும் குறைகேள் அதிகாரியிடம் முறையிடலாம்.
 •  நிதி நிறுவனத்துடன் பராமரிக்கப்படும் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளின் செயல்பாடு தொடர்பான வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள்.
 • ஏற்றுமதி உண்டியல்களை தவறாக கையாளுதல், உண்டியல்களை சேகரித்தல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை பெறுவதில் தாமதம் குறித்த ஏற்றுமதி வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள்.
 • கணக்குகள் வைத்துள்ள இலங்கையில் வசிக்காதவர்களின், இலங்கைக்கு பணம் அனுப்புதல் மற்றும் அவர்களின் கணக்குகளின் செயல்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள்.
 • நிதி சேவைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுகளை மீறுவது தொடர்பான முறைப்பாடுகள்.
 • விதிக்கப்படும் கட்டணங்கள் / அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான புகார்கள்.
 • நிதி குறைகேள் அதிகாரி, அவ்வப்போது மத்திய வங்கியால் குறிப்பிடப்படக்கூடிய வேறு ஏதேனும் தொடர்புடைய விடயங்களையும் கையாளலாம்.
 •  செலுத்தப்படாத அல்லது அதிக தாமதமாகும் காசோலைகள், வரைவுகள், உண்டியல்களின் கட்டணம் அல்லது சேகரிப்பு தொடர்பாக.
 • வாடிக்கையாளர்களுக்கும் ஏனையவர்களுக்கும் வரைவுகளை வழங்காதது.
 • பரிந்துரைக்கப்பட்ட வேலை நேரங்களை பின்பற்றாமை.
 • வங்கிகளால் வழங்கப்பட்ட உத்தரவாதம் /கடன் சான்றுகளை மதிக்கத் தவறியது.
 • வைப்புக் கணக்குகள், நடைமுறைக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள் ஆகியவற்றிலிருந்து அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடியான முறையில் மீளப் பெறுவதற்கான உரிமைகோரல்கள்
 • காசோலை / வங்கி வரைவினை மோசடியான முறையில் பணமாக்கல்.

விதிகள் மற்றும் தேவைகள்

இலங்கை நிதி குறைகேள் அதிகாரி, ஒரு மரியாதைக்குரிய சுயாதீன நபராவார். அவர் பாரபட்சமின்றி செயல்படுவதுடன் உங்கள் முறைப்பாட்டை விசாரித்து அதைத் தீர்ப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவருக்கு ஒரு திறமையான மற்றும் தகுதியான ஊழியர்கள் உதவுகிறார்கள். ஊழியர்கள் உங்கள் புகாரை உங்களுடன் கலந்துரையாடுவார்கள், தேவையேற்படின் நீங்கள் முறைப்பாடளித்த நிதி நிறுவனத்திடமிருந்து தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் உண்மைகளையும் பெற்றுக் கொள்வார்கள்.

இந்த நோக்கத்திற்காக நீங்கள் அத்தகைய தகவல்களை வெளியிடுவதற்கு எழுத்துப்பூர்வ அதிகாரத்தை வழங்க வேண்டும். இரகசியத்தின் கடமை வாடிக்கையாளர்களைப் பற்றிய அனைத்து தகவல்களுக்கும் பொருந்தும் என்பதால் இந்த எழுத்துப்பூர்வ அதிகாரம் தேவைப்படுகிறது.

ஒரு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி செயற்படுவது போன்ற எந்தவொரு நடைமுறை அல்லது சான்றுகள் தொடர்பான விதிகளை அவதானிப்பது குறைகேள் அதிகாரிக்கு அவசியமில்லை. பொருத்தமானதாகக் கருதப்படும் எந்தவொரு நடைமுறையையும் பின்பற்ற குறைகேள் அதிகாரிக்கு உரிமை உண்டு.

ஒரு சட்டத்தரணி /வழக்கறிஞர் உங்கள் முறைப்பாட்டை வரைவதற்கோ அல்லது உங்கள் முறைப்பாட்டை நீங்கள் வரைவதற்கு உதவவோ முடியும் எனினும், எந்தவொரு வழக்கறிஞரும் குறைகேள் அதிகாரி முன் ஆஜராக அனுமதிக்கப்படுவதில்லை. குறைகேள் அதிகாரிக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடளிக்கும்போது, குறைகேள் அதிகாரிக்கு முன் எந்தவொரு விசாரணையிலும் அல்லது நடவடிக்கைகளிலும் எந்த வழக்கறிஞரும் உங்களை பிரதிநிதித்துவப்படுத்தமாட்டார்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

உங்கள் முறைப்பாடு தோல்வியுற்றாலும் மற்றும் /அல்லது குறைகேள் அதிகாரியின் முடிவு / தீர்ப்பு குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்தாலும் எந்தவொரு காரணங்களுக்காகவும் குறைகேள் அதிகாரி மற்றும் அவரது ஊழியர்களுக்கு எதிராக சட்டரீதியான அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்மேன் என நீங்கள் உங்கள் எழுத்துப்பூர்வ முறைப்பாட்டில் குறிப்பிட வேண்டும்.

குறித்த முறைப்பாடு அற்பமானது அல்லது தொந்தரவு தரக்கூடியது என்று குறைகேள் அதிகாரி கருதினால் எந்தவொரு முறைப்பாட்டையும் நிராகரிக்க அவருக்கு உரிமை உள்ளது.

குறைகேள் அதிகாரிக்கு ஒவ்வொரு முறைப்பாடும் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படுவதுடன் முறைப்பாட்டாளர்; கையொப்பமிடவும் வேண்டும். இதனுடன் ரூபா 250/= (இருநூற்று ஐம்பது ரூபாய்) கட்டணம், பணம், வங்கி வரைவு, தனிப்பட்ட காசோலை, காசுக்கட்டளை அல்லது அஞ்சல் கட்டளை மூலம் செலுத்தப்பட வேண்டும். முறைப்பாடு வெற்றியளித்தால் அல்லது ஓரளவு வெற்றிகரமாக இருந்தால், அந்த கட்டணம் திருப்பித் தரப்படும். இல்லையெனில் அப் பணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் முறைப்பாடளித்தவர் பணத்தைத் திரும்பக் கேட்க முடியாது.

நீங்கள் (அ) ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்திருந்தால் மற்றும் (ஆ) நிதி நிறுவனம் குறிப்பிட்ட நான்கு (4) வாரங்களுக்குள் உங்கள் முறைப்பாட்டைத் தீர்த்து வைக்கவில்லை அல்லது அதைப் பற்றி உங்களுக்கு திருப்தியளிக்கும் முறையில் பதிலளித்திருந்தால் அன்றி நீங்கள் நேரடியாக குறைகேள் அதிகாரிக்கு செய்ய முடியாது. மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர்தான் நீங்கள் குறைகேள் அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடளிக்க முடியும்.

நிதி நிறுவனத்துக்கோ அல்லது குறைகேள் அதிகாரிக்கோ நீங்கள் அளித்த முறைப்பாடு முறைப்பாட்டுக்கான காரணங்கள் எழுந்த பின்னர் பன்னிரண்டு மாதங்களுக்குள் / ஒரு வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும். நிதி நிறுவனத்திற்கு நீங்கள் அளித்த முதல் முறைப்பாட்டிலிருந்தே ஒரு வருட காலம் கணக்கிடப்படும். ஒரு வருடத்திற்குள் முறைப்பாடு செய்ய வேண்டுமெனக் குறிப்பிடுவது, முறைப்பாடுகள் தாமதமாக கிடைப்பதைத் தடுப்பதற்காகும்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்களால் குறைகேள் அதிகாரியிடம் முறைப்பாடு செய்ய முடியாது:
 •  நீங்கள் முன்பு ஒரு முறைப்பாடு செய்து, அந்த விடயத்தை குறைகேள் அதிகாரி விசாரித்து ஒரு தீர்மானத்தை வழங்கியிருப்பின்.
 • இதேபோன்ற விடயம் / முறைப்பாடு குறைகேள் அதிகாரியினால் விசாரிக்கப்பட்டு ஒரு தீர்மானம் வழக்கப்பட்டது. உங்கள் முறைப்பாட்டின் உண்மைகள் முற்றிலும் வேறுபட்டதாக இல்லாவிட்டால் அந்த தீர்மானம் உங்களுக்கும் பொருந்தும்.
 • உங்கள் முறைப்பாடு ஏற்கனவே எந்தவொரு நீதிமன்றம் / தீர்ப்பாயம் / மத்தியஸ்தம் போன்றவற்றின் முன் விசாரணைக்கு உட்பட்டிருப்பின்.
 • குறைகேள் அதிகாரியின் அபிப்பிராயத்திற்கமைய எந்தவொரு முறைப்பாட்டையும் நிராகரிக்க மற்றும் / அல்லது விசாரணையை தொடராதிருக்க ஒம்புட்ஸ்மனுக்கு உரிமை உண்டு.
 • முறைப்பாடு அற்பமானது / தொந்தரவுக்குரியது அல்லது மோசமான நம்பிக்கையுடன் அல்லது போதுமான காரணமின்றி செய்யப்பட்டிருப்பின்.
 • முறைப்பாடளித்தவர் நியாயமான விடாமுயற்சியுடன் முறைப்பாட்டைத் தொடரவில்லையெனில்.
 • முறைப்பாட்டாளருக்கு உண்மையான இழப்பு அல்லது சேதம் அல்லது சிரமங்கள் ஏற்படவில்லை எனில்.
 • முறைப்பாடு ஒரு சிக்கலான தன்மை கொண்டது, இது விரிவான ஆவணம் மற்றும் வாய்வழி சான்றுகள் அல்லது சிக்கலான சட்ட சிக்கல்களை உள்ளடக்கியது, இது குறைகேள் அதிகாரி போன்ற ஒரு நபரின் விசாரணை அல்லது முடிவுக்கு பொருந்தாது எனில்.

நடைமுறைகள்

குறைகேள் அதிகாரி அலுவலகம் ஒரு முறைப்பாட்டைப் பெறும்போது, முறைப்பாட்டு விதிகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்தும். உதாரணமாக (அ) முறைப்பாடு முதலில் நிதி நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (ஆ) இது முன்னர் குறிப்பிட்டபடி முறைப்பாட்டாளரால் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிடப்பட்டுள்ளது மற்றும் மற்றும் பிற தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாடு விசாரணைக்குத் தகுதியானது என்று குறைகேள் அதிகாரி திருப்தியடைந்தால், முறைப்பாட்டாளரிடமிருந்தும் தொடர்புடைய நிதி நிறுவனத்திடமிருந்தும் தேவையான அனைத்து தகவல்களையும் ஆவணங்களையும் குறைகேள் அதிகாரி அலுவலகம் பெறும்.

முறைப்பாட்டாளரின் திருப்திக்கு முறைப்பாடு / தகராறின் தீர்வை ஊக்குவிக்க குறைகேள் அதிகாரி அலுவலகம் முயற்சிக்கும்.

முறைப்பாட்டிற்கு தீர்வு எதையும் பெற முடியாவிட்டால், முறைப்பாடு செய்த திகதியிலிருந்து ஆறு வார காலத்திற்குள் அல்லது குறைகேள் அதிகாரி தேவை என கருதும் மேலதிக காலத்திற்குள், இரு தரப்பினருக்கும் தங்கள் வழக்கை முன்வைக்க ஒரு வாய்ப்பை வழங்கிய பின்னர் அவர் / அவள் ஒரு தீர்ப்பை வழங்குவார். இந்த தீர்ப்பை வழங்குவதில், குறைகேள் அதிகாரி, முன்னர் கூறியது போல, சம்பந்தப்பட்ட தரப்புகளால் அவர்முன் வைக்கப்பட்ட சான்றுகள், வங்கிச் சட்டம் மற்றும் நடைமுறையின் கொள்கைகள், மத்திய வங்கி வழங்கிய வழிகாட்டல்கள், நடத்தை நெறிமுறைகள் மற்றும் கையேடுகள் மற்றும் பிற காரணிகளால் வழிநடத்தப்படும் அடிப்படையில் அவரது ஃ அவளது கருத்து நீதியின்போது கருத்திற் கொள்ளப்படும்.

தீர்ப்பு நிதி நிறுவனத்திற்கு அதன் கடமைகளின் குறிப்பிட்ட செயல்திறனுக்கான வழிகாட்டல் / வழிகாட்டல்கள் ஏதேனும் இருந்தால், தீர்ப்பு வழங்குவதற்கான காரணங்களின் சுருக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அதிகபட்சமாக இலங்கை ரூபாய் மூன்று மில்லியனுக்கு உட்பட்டு, அவர் அனுபவித்த உண்மையான பண இழப்பு, இழப்பீடு மூலம் முறைப்பாட்டாளருக்கு நிதி நிறுவனத்தால் செலுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தொகைகள் பெரிதாக இருந்தால், தரப்புகள் (அவர்கள் விரும்பினால்) நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு குறைகேள் அதிகாரி பரிந்துரைக்கலாம்.

ஒரு குறைகேள் அதிகாரியின் தீர்ப்புக்கு நிதி நிறுவனம் கட்டுப்பட்டுள்ள நிலையில், அத்தகைய தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்த ஒரு முறைப்பாட்டாளர், அவர் / அவள் விரும்பினால், நீதிமன்றத்திற்கு செல்லலாம். எவ்வாறாயினும், அத்தகைய சந்தர்ப்பத்தில், அத்தகைய முறைப்பாடு மற்றும் அதற்கான காரணங்கள் மற்றும் தீர்ப்பு குறித்த குறைகேள் அதிகாரியின் விசாரணையின் முழு அறிக்கையையும் அத்தகைய நீதிமன்றத்திற்கோ அல்லது நீதிபதிக்கோ வழங்க குறைகேள் அதிகாரி உரிமை பெறுவார், அத்தகைய சான்றுகள் வழங்கப்படுவதை எதிர்க்க முறைப்பாட்டாளருக்கு உரிமை இல்லை.

குறைகேள் அதிகாரி வழங்கி தீர்ப்பை முறைப்பாட்டாளர் ஏற்றுக்கொள்வது தரப்புகளிடையே இந்த விடயத்தின் முழுமையான மற்றும் இறுதியான தீர்வாக கருதப்படும்.

பணத்தைப் பெறும் நேரத்தில், இந்த விவகாரத்தின் முழுமையான மற்றும் இறுதித் தீர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பை அவன்/ அவள் ஏற்றுக்கொள்கிறார்கள், மேலும் அதே பிரச்சினையில் அவருக்கு / அவளுக்கு மேலும் உரிமை கோர முடியாது என சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு உறுதி வழங்குமாறு குறைகேள் அதிகாரி முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்துவார்.

முறைப்பாட்டாளர் நிதி நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட இழப்பீட்டை மதிக்க மறுத்தால், முறைப்பாட்டாளருக்கு எதிராக இழப்பீட்டின் அடிப்படையில் அதன் கோரிக்கையை கோருவதற்காக நீதிமன்றத்தை அணுக நிதி நிறுவனத்திற்கு சந்தர்ப்பமுண்டு.

தீர்ப்பின் பிரதி முறைப்பாட்டாளருக்கும் முறைப்பாட்டில் பெயரிடப்பட்ட நிதி நிறுவனத்திற்கும் அனுப்பப்படும்.

தீர்ப்பின் பிரதி கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முறைப்பாட்டாளர் அதை வழங்காவிட்டால், அது வழங்கப்படும் ஒரு நிதி நிறுவனத்தை தீர்ப்புக்கு கட்டுப்படுத்தாது. இந்த விவகாரத்தில் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட கடிதமே முழுமையானதும் இறுதியானதுமாகும்.

முறைப்பாட்டாளர் குறைகேள் அதிகாரி வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர் ஏற்றுக்கொள்ளல் கடிதத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அல்லது வழங்கப்பட்ட எந்த கால நீடிப்புக்குள்ளும் வழங்கத் தவறினால், குறைகேள் அதிகாரி முறைப்பாட்டை நிராகரிக்க முடியும்.

நிதி நிறுவனம் அதைப் பெற்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள், முறைப்பாட்டாளரால் தீர்ப்பை எழுத்துப்பூர்வமாக ஏற்றுக்கொள்தல் அல்லது முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட காலத்திற்குள், தீர்ப்புக்கு இணங்குதல் மற்றும் குறைகேள் அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு இணங்குதல் வேண்டும்.

நிதி குறைகேள் அதிகாரி திட்டம் பற்றிய அனைத்து விபரங்களும் வாடிக்கையாளராக நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளும் இந்த இணையத்தளத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் இந்த இணையத்தளத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.